கொரோனா அச்சம் காரனமாக, நாடு முழுவதும் பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டே இருக்கிறது. இருப்பினும் கல்வியாண்டை அப்படியே விடமுடியாது என்பதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன. கூடவே தமிழக அரசு சார்பில், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது.

ஆன்லைன் வகுப்புகள் நகர்புறங்களில் நடைமுறைக்கு வந்தாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் முழுமையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது இல்லை. ஆன்ட்ராய்டு செல்போன் எல்லா மாணவர்களிமும் இல்லாத காரணத்தால் இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்தால்தான் மாணவர்களுக்கு பாடங்கள் புரியும் என்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களின் விருப்பத்துடன் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளை தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. விருப்பப்படும் மாநிலங்கள் பெற்றோர்-ஆசிரியர்களுடன் கலந்து பேசி வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதன்படி ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம், அசாம், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.


இந்நிலையில், நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி வகுப்புகளை துவங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:வரும் அக்., 30க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். நவ., 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை துவங்கலாம். பருவத்தேர்விற்கு தயாராக மார்ச் 1 முதல் 7 வரை விடுமுறை வழங்கலாம். தேர்வை மார்ச் 8 முதல் 26ம் தேதி வரை நடத்தலாம். முதல் பருவ தேர்வு விடுமுறையை மார்ச் 27 முதல் ஏப்., 04 வரை அளிக்கலாம். இரண்டாம் பருவ வகுப்புகளை ஏப்.,4ல் துவங்கலாம். தேர்விற்கு தயாராக ஆக., 1 முதல் 08 வரை விடுமுறை அளித்து, ஆக., 09 முதல் 21 வரை தேர்வை நடத்தலாம். ஆக., 22 முதல் 29 வரை விடுமுறை அளிக்கலாம். ஆக., 30ல் மீண்டும் கல்லூரியை திறக்கலாம்" எனக்கூறப்பட்டுள்ளது.

இதில் மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்த  கல்வித்துறை அமைச்சர், அதுபற்றி  அம்மாநில துணை முதலமைச்சரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான அஸ்வத் நாராயணன் ``அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பதற்கு கர்நாடக மாநிலம் தயாராகி வருகிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்" பதிவிட்டுள்ளார். இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

``கல்வி ஆண்டு தொடங்கியதும், இளங்கலை, பொறியியல், பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படும்" என்றும் ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி திறப்பு தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு காத்திருப்பதாகவும், அதனை பொறுத்து மாநில அரசு கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் முதல் அனைத்து கல்வி நடவடிக்கையிலும் ஆன்லைன் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அஸ்வத் நாராயணன் கூறியுள்ளார்.