டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியான இளம்பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் 27 வயதான இளம் பெண் ஒருவர், அந்த பகுதியில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். அத்துடன், டிக்கெட் புக்கிங்க் ஏஜெண்டாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

அப்போது, சுற்றுலா தொழில் விசயமாக, அந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர், நன்றாக அறிமுகம் ஆகி உள்ளார். அவர், அந்த பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், மனோஜ் தனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர் என்பதால், அவரிடம் அந்த பெண் தன் சொந்த விசயமாக 18 லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதன்படி, குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன், அவரும் அந்த 27 வயது பெண்ணுக்குப் பணம் கொடுக்க சம்மதித்து உள்ளார்.

அதன்படி, கடன் தொகையின் முதல் தவனையைான 7 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் 2 வது கடன் தொகையைப் பெறுவதற்காக அவர் மனோஜ் என்பவரிடம் கேட்டு உள்ளார். அப்போது, அவர் நேரில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறி உள்ளார். அத்துடன், ஒரு குறிப்பிட்ட நட்சத்திர விடுதியின் பெயரைச் சொல்லி “நான் அங்கு இருக்கிறேன். இந்த ஓட்டலில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றும், அவர் கூறி உள்ளார். 

அதன் படி, கடன் தொகையை வாங்குவதற்காக, அவரை சந்திக்க அந்த பெண் அந்த நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அதன்படியே, அந்த பெண்ணும் குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றுவிட்டு, அந்த ஓட்டலின் வரவேற்பு அறையில் அமர்ந்து நின்று, மனோஜை இங்கு வரும்படி அழைத்து உள்ளார். ஆனால், அவரோ “நான் தங்கி உள்ள அறைக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்.

அந்த பெண்ணும், வேறு வழியில்லாமல், மனோஜ் சர்மா கூறிய அந்த அறைக்குச் சென்று பெல்லை அடித்து உள்ளார். அப்போது, அந்த பெண்ணை உள்ளே வரச்சொல்லி ஏதேதோ விசயங்களில் பேச்சுக் கொடுப்பது போல், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அந்த அறையில் மறைந்து இருந்த மனோஜ் சர்மாவின் மேலும் 4 நண்பர்கள் திடீரென்று பாய்ந்து வந்து, அந்த இளம் பெண்ணை மடக்கப் பிடித்து, அந்த பெண் சத்தம் போடாத அளவுக்கு வாயை மூடி, 5 பேருமாகச் சேர்ந்து, அந்த பெண்ணை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, நாசம் செய்து உள்ளனர்.

இதில், அந்த பெண் அந்த கும்பலிடம் விடப்பிடியாகப் போராடி உள்ளார். ஆனால், வெறிபிடித்த அந்த கும்பல், துளியும் அந்த இளம் பெண் மீது இறக்கம் காட்டாமல் வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண் அழுது புலம்பி உள்ளார். இதனையடுத்து, மனோஜ் சர்மா அந்த பெண்ணை தனது காரிலேயே அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று இறக்கி விட்டு விட்டு, அங்கிருந்து மாயமாகி உள்ளார்.

இதனையடுத்து, மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோஜ் சர்மாவை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மனோஜ் சர்மா விடம் வாக்கு மூலம் பெற்று, அவருடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற 4 பேர் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக உள்ள அவர்கள் 4 பேரையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

அத்துடன், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த இளம் பெண்ணை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்டுபத்தினர். 

இதனிடையே, சுற்றுலா வழிகாட்டியான இளம் பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.