பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரிய நேசன் உயிரிழந்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் - 3 ல், இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா கலந்துகொண்டதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் சீசன் - 3 ல் கலந்துகொண்ட இளம் பெண் லாஸ்லியா, அங்கு தன்னுடைய சக போட்டியாளரான கவினை காதலித்தார் என்று பேசப்பட்டது. இது தொடர்பாகப் பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் வெளியான நிலையில், அந்த நேரத்தில் திடீரென்று  லாஸ்லியாவின் தந்தை மரிய நேசன், தாயார் 

ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைந்து மகள் லாஸ்லியாவிற்கு அறிவுரைக் கூறினர். இதன் காரணமாக, லாஸ்லியா இன்னம் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, “பிரெண்ட்ஷிப்” என்ற படத்தில், தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அத்துடன், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், மற்றொரு புதுமுக நடிகருக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும், அவர் தற்போது சத்தம் இல்லாமல் நடித்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், நடிகை லாஸ்யாவின் தந்தை மரிய நேசன், கனடாவில் இன்று திடீரென்று உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை லாஸ்லியா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதனால், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில்  நடிகை லாஸ்யாவிற்கு ஆறுதல் தெரிவித்தும், அவரது தந்தை மறைவுக்கு இரங்களும் தெரிவித்து வருகின்றனர். 

அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் “Ripmariyanesan", "Losliya" ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. அத்துடன், நடிகை லாஸ்யாவின் தந்தை மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும், இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல், தேசிய விருது பெற்ற பிரபல வங்காள நடிகர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார். 85 வயதாகும் சவுமித்ர சாட்டர்ஜி, இது வரை சத்யஜித்ரே இயக்கிய 14 படங்களில் நடித்துள்ளார். அத்துடன், மிரணாள் சென் உள்ளிட்ட மேலும் பல புகழ் பெற்ற இயக்குனர்கள் படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் கடந்த ஆண்டு “சன்ஜ்பாதி” படம் வெளியானது. அந்த படத்தில் நடித்ததன் மூலம், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவர் பெற்றார். 

மேலும், “பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளும்” அவர் வாங்கி இருக்கிறார். 85 வயதாகும் சவுமித்ர சாட்டர்ஜிக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பும் இருந்தது. இதன் காரணமாக, அவருக்குச் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், சவுமித்ர சாட்டர்ஜி உடல் நிலை நேற்று திடீரென்று மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது, அவரது உடலானது, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தலைமை மருத்துவர் அரிந்தம் கர் கூறினார். எனினும், அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர். ஆனாலும், அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.