தொப்பூர் கணவாய்  நெடுஞ்சலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய்  நெடுஞ்சலையில் நின்றுக்கொண்டிருந்த பைக் மீது அதிவேகத்தில் வந்த மினி லாரி மோதியதில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது .இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சூழ்ந்தது.தொப்பூர் கணவாய் பகுதி ஏற்கனவே விபத்துப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தும்  மீண்டும் இந்த விபத்து நடந்துள்ளது. கிரேன் உதவியுடன் சாலையின் நடுவில் இருந்த  வாகனங்களை மீட்டு அருகில் வைக்கும் பணியை மேற்கொண்டார். தருமபுரி எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். 


விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகாபேசுகையில், விபத்து ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கபப்டும் என தெரிவித்தார். சிமெண் எடுத்துவந்த லாரி அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும், விபத்திற்கு காரணமான ஓட்டுனரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்காலிகமாக விபத்தை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்தார். 

தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதால் இந்த மாதிரியான விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதை தடுப்பதற்கு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது நடந்து இருக்கும் இந்த விபத்து கோர விபத்தாக பார்க்கப்படுகிறது.