“20 மணி நேரம் உழைப்பார், 4 மணி நேரம் தான் தூங்குவார், யூட்யூபை முடக்கியதால் எங்களது வாழ்வாதாரமே போச்சு” என்று, வெடித்துக் கிளம்பிய யூடியூபர் மதன் மனைவி கிருத்திகா பேசியுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகள் அதிகம் மூழ்கி இருந்தனர். இப்படியான சிறுவர் சிறுமிகளைக் குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தார்கள். இப்படியா நிலையில் தான், “பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ்” பற்றி பேசுவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு மதன் என்பவர், யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி, பள்ளி மாணவர்கள் பலரையும் மதன் தனது பக்கம் திருப்பினார்.

இப்படியாக, தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக் கொண்டே விளையாடி, அவற்றைத் தனது யூடியூப் சேனலிலும் வீடியோவாக வெளியிட்டு வந்த மதன் மீது, சென்னையில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீசார், 100 க்கணக்கான புகார்களைப் பதிவு செய்து,  மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை கடந்த மாதம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

ஆனால், கிருத்திகா ஜாமீனில் வெளியே வந்துவிட்ட நிலையில், மதன் மீதான ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்து உள்ளது. . 

குறிப்பாக, சென்னை புழல் சிறையில் இருக்கும் மதன் மீது, தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். 

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய கிருத்திகா, “என் கணவர் மதன், தடை செய்யப்பட்ட சீனா பப்ஜி விளையாட வில்லை. கொரியன் வெர்ஷ்ன் தான் விளையாண்டார்” என்று. புதிய விளக்கம் கொடுத்தார். 

மேலும் “ கடந்த 3 வருடங்களாக என் கணவர் மதன், பப்ஜி விளையாடி வருகிறார்” என்றும், சிலர் கூறியதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

முக்கியமாக, “எங்களிடம் பங்களாவும் இல்லை, சொகுசு காரும் இல்லை” என்றும், தெரிவித்த கிருத்திகா, “என் கணவர் மதன், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறார். 4 மணி நேரம் மட்டும் தான் தூங்குவார்” என்றும், அவர் கூறினார்.

அத்துடன், “எங்கள் யூட்யூப் பக்கத்தை முடக்கி உள்ளனர் என்றும், இதனால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

“நான் பப்ஜி கேம் விளையாடவில்லை என்றும், எனக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்மதமும் இல்லை” என்றும் கூறிய கிருத்திகா, “போலீசார் பதிவு செய்த வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்றும், கிருத்திகா மிகவும் ஆவேசமாகப் பேசினார்.

அதே போல், “யூடியூப் வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை என்றும், அது எனது குரல் தான் என்று நிரூபிக்கத் தயாரா?” என்றும், அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். 

முக்கியமாக, “எந்த முகாந்திரமும் இல்லாமல், மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றும், கிருத்திகா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.