“சீரியல்ல நடிக்க வைக்கிறேன்” என்று, ஆசைக்காட்டி பள்ளி ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த சீரியல் மேனேஜர் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று, நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியைச் சேர்ந்த 30 வயதான கலைச்செல்வி, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 

அப்போது, இந்த ஆசிரியையின் வீட்டின் அருகில் டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் ஒரு குறிப்பிட்ட சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது, அந்த சீரியல் தொடரின் மேனேஜரான 53 வயதான ரகு, ஆசிரியர் கலைச்செல்வியிடம் அறிமுகம் ஆகி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் கலைச்செல்வியிடம் பல ஆசை வார்த்தைகள் கூறி, “நான் உங்களை சீரியலில் நடிக்க வைக்கிறேன்” என்று, மேனேஜரான ரகு கூறியுள்ளார். 

அத்துடன், “எனது மனைவி இறந்து விட்டார்” என்றும், ரகு அந்த ஆசிரியையிடம் பொய்யான தகவலையும் கூறி வைத்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, சீரியல் மேனேஜரான ரகுவுடன், ஆசிரியை கலைச்செல்வி தொடர்ந்து பேசிப் பழகி வந்து உள்ளார். 

மேலும், “என் மனைவி இறந்து விட்டதால், நான் உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, அந்த டீச்சரிடம் அவர் கூறி, அந்த டீச்சரை பல இடங்களுக்கு அவர் அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் என்றும், கூறப்படுகிறது. 

இப்படியான தனிமையான உல்லாச பயணத்தால், அந்த டீச்சர் 4 முறை கர்ப்பம் அடைந்து உள்ளார். அந்த டீச்சர் கர்ப்பம் அடைந்த போதெல்லாம், ரகுவின் கட்டாயத்தின் பேரில், அந்த டீச்சர் 4 முறையும் கருக்கலைப்பு செய்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த டீச்சரை, ரகு திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்திருக்கிறார். 

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த டீச்சர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார்.

அப்போது, “அந்த டீச்சர் மன நலம் பாதிக்கப்பட்டவர்” என்று, தவறான தகவலை அவர் தொடர்ந்து பரப்பி வந்ததுடன், “அந்த டீச்சர் நடத்தை சரியில்லாதவர்” என்றும்,  போலீசாரிடம் கூறி வழக்குப் பதிவு செய்ய விடாமல், போலீசாரை தனிப்பட்ட முறையில் சரிக்கட்டி வந்தார் என்றும், கூறப்படுகிறது. 

இப்படியாக, கடந்த 8 மாதமாக, ரகு மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்து உள்ளனர்.

இதனால், போலீசார் மீது நம்பியைக்கையை இழந்த அந்த டீச்சர், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “சம்மந்தப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 5 பிரிவின் கீழ் ரகு மீது வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், தற்போது தலைமறைவாக உள்ள ரகு மற்றும் அவரது உறவினரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், சென்னை பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.