சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர்; மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர்; மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் - Daily news

2019ல் தமிழ்நாடு பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் புகைப்படத்துக்கு காவி உடை அணிவித்து, ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. இந்த செயலுக்கு  தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

அதன்பின்பு, கடந்த 2020ல் ஆண்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, துணை குடியரசுத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தைப் பகிர்ந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த பின்பு, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.


இந்தநிலையில்,  சி.பி.எஸ்.இ 8-ம் வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில், திருவள்ளுவரின் புகைப்படத்தில் தலை முடியற்று வலுக்கை தலையுடன் காவி உடையில் பூசாரி போன்ற தோற்றத்தில் உள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.


இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மு.க.ஸ்டாலின், ‘சி.பி.எஸ்.இ 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம். பா.ஜ.க அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை’ என்று பதிவிட்டுள்ளார்.

stalin

Leave a Comment