நடிகையை இயக்குநர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகப் பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

மும்பையில், புதிய படத்திற்காக நடிகைகளை தேர்வு செய்யும் இயக்குநர் ஆயுஷ் திவாரி ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, மும்பையைச் சேர்ந்த பல புதுமுக நடிகைகள் அந்த தேர்வுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரும் அங்கு வந்திருந்தார்.

அப்போது, அந்த இயக்குநருக்கும், அந்த தொலைக்காட்சி நடிகைக்கும் அறிமுகம் ஆகி பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கடைசி வரை அந்த தொலைக்காட்சி நடிகையை அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த தொலைக்காட்சி நடிகை கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில், “நடிகைகளை தேர்வு செய்யும் 

இயக்குநர் ஆயுஷ் திவாரி, என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக” பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி புகார் அளித்தார்.

புகாரைப் பதிவு செய்த வெர்சோவா காவல் நிலைய போலீசார், புகார் தொடர்பாக பிரிவு 376 இன் கீழ் ஆயுஸ் திவாரி மீது வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகின்றனர்.

அதே நேரத்தில், அந்த நடிகை அளித்த புகார் மனுவில், “திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த 2 வருடங்களாக என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக” அந்த நடிகை புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்றும், இதனால் இந்த வழக்கில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும்” காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்நிலையில், “குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இது வரை கைது செய்யப்படவில்லை” என்று கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

அதே போல், பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மாமியார் ஒருவர் கல்யாண மாப்பிள்ளைக்கு ஏகே 47 துப்பாக்கியைத் திருமண பரிசாக அளித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதே நேரத்தில், இப்படி ஒரு பயங்கரமான ஆயுதத்தை மாமியார் பரிசாக அளிக்கும் போது, அந்த மாப்பிள்ளையின் முகத்தில் எந்த வித அதிர்ச்சியும், ஆச்சரியமும் காணப்படவில்லை என்றும், கூறப்படுகிறது. 

மேலும், அந்த கல்யாண மாப்பிள்ளை இதைத் தான் எதிர்பார்த்துக் காத்து இருந்ததைப் போலவே இந்த நிகழ்வு இருந்தது என்றும், ஒரு வேளை இவர்கள் திருமணத்தில் துப்பாக்கி பரிசாக அளிப்பதையே ஒரு சடங்காக இருக்குமோ?! என்றும் இணையத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு, இணையத்தில் வைரலாகி வருகிறது.