உணவு கேட்க வந்தவனால் ஏற்பட்ட தகராறில் விவசாயிகள் 110 பேர் கழுத்தை அறுத்து மிக கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நைஜீரியா நாட்டில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள நைஜீரியாவில் நாட்டின் போர்னோ மாகாணத்தில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதா தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்தது.

அத்துடன், நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் பல ஆண்டுகள்காக குற்றச்சாட்டுகள் எழுவது தொடர் கதையாகி வருகின்றன. 

குறிப்பாக, அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, அந்நாட்டில் அவர்கள் அங்குள்ள அப்பாவி கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்துத் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு போர்னோ மாகாணத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அந்த மாகாணத்தில் நெல் உற்பத்திக்குப் பெயர்போன கரின் குவாஷேபே என்னும் கிராமத்தில், வயல்களில் அறுவடை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அங்கு, பெரும்பாலான விவசாயிகள் வாக்களிக்க செல்லாமல் தங்களது வயல்களில் அறுவடை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த நேரம் பார்த்து, அவர்களை நோக்கி வந்த ஒருவன், அந்த விவசாயிடம் “ தனக்கு உணவு தரும்படி” கேட்டு உள்ளான். இதனால், சந்தேகம் அடைந்த அந்த விவசாயிகள், சந்தேகத்தின் பேரில் அவனை பிடித்து வைத்துக்கொண்டு, விடுவிக்க மறுத்துவிட்டனர். 

இதன் காரணமாக, அவர்களுக்குள் முதலில் வாக்குவாதமும், அதன் பிறகு தகராறும் ஏற்பட்டு உள்ளது. 

மேலும், விவசாயிகளால் ஒருவர் சிறைப் பிடிக்கப்பட்ட பற்றிய தகவல், சிறைப் பிடிக்கப்பட்டவனை சேர்ந்த கும்பலுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், கையில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் கொண்ட கும்பல் ஒன்று, வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைச் சுற்றி வளைத்தனர். அப்போது, அந்த பயங்கரவாதிகளைப் பார்த்த விவசாயிகள் பயந்து நடுங்கினர்.
 
அதன் பின்னர், அந்த பயங்கரவாதிகள் பலவிதமான கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு, கண்மூடித்தனமாக விவசாயிகளைக் கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இப்படி அவர்கள் முதலில் 40 விவசாயிகள் படுகொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் ஒட்டு மொத்தமாக 110 விவசாயிகளை இதுபோன்று கழுத்தை அறுத்து படுகொலை செய்தது தெரிய வந்தது. இந்த சண்டையில், பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். 

இந்த தகவலை, ஐ.நா. அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனித நேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கால்லன் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, அங்கு விவசாய வேலை செய்துகொண்டிருந்த பல பெண்களையும், அந்த பயங்கரவாத கும்பல் தங்களுடன் கடத்திச் சென்று உள்ளனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.