தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.இருவருக்கும் இருபெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்து வருகின்றனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார்.பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்த படத்தை தொடங்கினார் ராஜமௌலி.இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் இரண்டு அறிமுக டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த வருட இறுதியில் வெளியாவதாக இருந்த இந்த படம் கொரோனா பாதிப்பு காரணாமாக தள்ளிப்போனது.

கொரோனா பாதிப்பு காரணாமாக தள்ளிப்போன இந்த படத்தின் ஷூட்டிங் அரசு அனுமதியை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது நடந்த வந்த 50 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பை உடனடியாக படக்குழுவினர் தொடங்குகின்றனர் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.