அதிகாலை நேரத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் அந்த ரயில் நிலையத்தில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

இப்படி ஒரு கொடூர சம்பவம், தலைநகர் டெல்லியில் தான் அரங்கேறி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பிறகு, நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகின்றன. அதற்கு ஒரு உதாரணமாகத் தான், இந்த பாலியல் பலாத்கார சம்பவமும் திகழ்கிறது.

தலைநகர் டெல்லியில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஒரே அணியாகத் திரண்டு மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள 3 வேளாண் 
சட்டங்களுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி வரும் அதை நேரத்தில் தான் தலைநகர் டெல்லியில் இப்படி ஒரு கொடூர சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. 

டெல்லி ஷாகுர் பஸ்தி ரயில் நிலையத்தில் கடந்த 10 ஆம் அதிகாலை 3 மணி அளவில் இளம் பெண் ஒருவர் அங்குள்ள நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்து உள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த இளம் பெண்ணை பார்த்தும், அந்த அதிகாலை நேரத்தில் சபலப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து, அந்த 3 பேரும் தங்களுக்குள் கூடிப் பேசி, அந்த பெண்ணை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று, திட்டம் போட்டுள்ளனர். அவர்கள் திட்டம் போட்ட படியே, அந்த பெண்ணை அதே ரயில் நிலையத்தில் வைத்து, மிரட்டியும், தாக்கியும் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

வெறித் தீர அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடித்த பிறகு, “இது குறித்து வெளியே சொன்னால், உன்னைத் தேடி வந்து கொலை செய்து விடுவோம்” என்றும், அந்த கும்பல் அந்த இளம் பெண்ணை பயங்கரமாக மிரட்டி எச்சரித்து அனுப்பி உள்ளது. 

இதனையடுத்து, நடக்க முடியாமல் அழுதுகொண்டே வீடு வந்த சேர்ந்த அந்த இளம் பெண், இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், தங்களது உறவினர்களுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை, அங்குள்ள மங்கோல்பூரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில், அந்த இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அதே நாளில் அந்த ரயில் நிலையத்தில் உள்ள கேட்டரிங் ஸ்டாலில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதையும் கண்டு பிடித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தான், அந்த இளம் பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், காவல் துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

இதனால், இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்குடன், கொள்ளை வழக்கு குறித்தும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட அந்த ரயில் நிலையத்தில், 24 மணி நேரமும் ரயில்வே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் சம்மந்தப்பட்ட ரயில் நிலையத்தில் இது போன்ற சம்பவம், நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.