“கல்யாணமாகி ஒரு வருசத்துல முதலிரவே நடக்கல சார்” கதறிய மனைவியிடம், கணவன் சொன்ன காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காலம், உலகையே திருப்பிப்போட்டு இருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், பாதாளத்திற்குத் தள்ளியதோடு, பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நடைபெறாத சம்பவங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு வித்தியாசமான மற்றும் விசித்திரமான சம்பங்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தின் அரங்கேறி உள்ளது.

அதாவது, கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதும், “காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் அனைவரும் பொது இடங்களில் சென்று வருவதையே முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், முகக்கவசம், கையுறைகள், சானிடைஸர் பயன்படுத்தி, சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்” என்று, மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தல்களை வழங்கியது.

அதன் படி, பொது மக்கள் பெரும் பாலும் பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான், வெளியே வந்து சென்றனர்.

அதே நேரத்தில், திருமணம் ஆன தம்பதிகள் மற்றும் காதலர்கள் பெரும்பாலும் தாம்பத்திய வாழ்க்கையை சிறிது காலம் தவிர்க்க வேண்டும் என்றும், சில வெளிநாட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இது தொடர்பான செய்திகளும், இணையத்தில் வைரலானது. இதனால் தான், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்குள் பிரச்சனையே ஏற்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபால் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குக் கடந்த ஜூன் மாதம் இறுதியில், இந்த கொரோனா வைரஸ் தொற்று நிலவி வந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றது. 

திருமணத்திற்குப் பிறகு, திருமணமான நாள் முதல் கொரோனா தொற்றின் மீதுள்ள பயத்தின் காரணமாக, தனது மனைவியிடம் இருந்து அந்த கணவன், சமூக இடைவெளியை முற்றிலும் கடைப்பிடித்து வந்து உள்ளார்.

கணவன் - மனைவிக்குள் ஒரு முத்தம் கூட பரிமாறிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மனைவி அருகே கூட செல்ல பயந்த கணவனுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் மனைவி தனது தாயார் வீட்டிற்கே சென்று உள்ளார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்த பகுதியில் உள்ள சட்ட ஆணையத்தில் புகார் அளித்தார். 

அதில், “எனது கணவர் என்னுடன் பாலியல் உறவு கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“இதனால், அவருக்கு ஆண்மைக் குறைவு இருக்கலாம்” என்றும், அந்த பெண் சுட்டிக்காட்டி உள்ளார். 

இது தொடர்பாக, அந்த பெண்ணின் கணவனை அழைத்து சட்ட ஆணையம் விசாரித்து உள்ளது. அப்போது, இது தொடர்பாக விளக்கமளித்த சம்மந்தப்பட்ட கணவன், “கொரோனா வைரஸ் மீதுள்ள பயத்தால் மட்டுமே, நான் எனது மனைவியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தேன்” என்று, விளக்கம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த நபருக்கு சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த பரிசோதனையில், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், முடிவுகள் வந்து உள்ளது.

மேலும், “என்னிடம் பேசும் போது கூட, அவர் இடைவெளியைக் கடை பிடிக்கிறார்” என்று, அதிகாரிகளிடம் அந்த பெண் மீண்டும் முறையிட்டு உள்ளார்.

அத்துடன், “எனது மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் என்னை அதிகம் துன்புறுத்தி வருவதாகவும்” அந்த பெண் குற்றம் சாட்டி உள்ளார். 

“இது குறித்து, தனது கணவரிடம் பேசியும் இந்த விஷயத்திற்கு ஒரு தீர்வும் காண முடியாது என்பதால் தான், நான் எனது வீட்டிற்குச் சென்றேன்” என்றும், அந்த பெண் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அதிகாரிகள் அந்த பெண்ணிற்கு சில அறிவுரைகளை வழங்கி, மீண்டும் கணவரின் வீட்டிற்கே திரும்ப அனுப்பி வைத்து உள்ளனர்.

குறிப்பாக, “கொரோனா தொற்றின் மீது இருந்த அதிகப்படியான பயத்தில் இருந்த கணவர், தன்னுடைய மனைவியின் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி கொரோனாவை தடுக்குமா என அஞ்சுவதால் அவர் இப்படி நடந்துகொண்டதாக” அதிகாரிகள் தெரிவித்து உள்ளார். 

முக்கியமாக, “இந்த தம்பதியினருக்குத் திருமணம் நடைபெற்ற பிறகு, மனைவியின் குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த கணவர் இன்னும் அதிகமான பயத்துடன், தன் மனைவியிடம் இப்படி நடந்துகொண்டதும்” விசாரணையில் தெரியவந்த குறிப்பிடத்தக்கது.