நிலவில் இருந்து கல், மண் போன்ற மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பும் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கி இருக்கிறது சீன விண்கலம் 'கேப்சூல்'!

   
கடந்த 1969-ம் ஆண்டு நிலவுக்கு விண்கலம் அனுப்பிய அமெரிக்கா, தன் தேசியக் கொடியை நாட்டியது. தற்போது நிலவில் சீனா தரையிறக்கிய சாங்-5 விண்கலத்தில் இருந்து ரோவர் இயந்திரம் மூலம் தனது தேசிய கொடியை நாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு பிறகு நிலவில் தேசிய கொடியை நாட்டு இரண்டாவது நாடாக சீனா அமைகிறது.

மேலும் நிலவில் இருந்து பாறைகள், மண் போன்றவற்றை சுமந்து கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறது சீன விண்கலம் 'கேப்சூல்'  சீனாவில் நிலாவை பெண் கடவுளாக பார்க்கப்படுகிறது. நிலவு கடவுளை 'சாங்' என்று அழைக்கின்றனர். அதன் பெயரிலேயே தனது விண்கலத்துக்கு 'சாங்-5' என்று சீனா பெயர் சூட்டியது. 


சீனாவிற்கு முன்பே நிலாவில் இருந்து கல், மண் போன்றவற்றை  அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பூமிக்குக் கொண்டு வந்து இருகின்றனர். சீனாவின் இந்த விண்கலம் ஒரு வாரத்துக்கு பிறகு லேண்டர் இயந்திரம், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது. நிலவிலிருந்து 'கேப்சூல்'விண்கலம் புறப்படும் வீடியோ காட்சிகளை சீன தொலைக்காட்சி ஒளிபரப்பி , நாங்களும் நிலாவில் சாதனைப்படைத்தவர்கள் வரிசையில் சேர்ந்து இருக்கிறோம் என்றியிருக்கிறது சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் பெருமையாக.