பூவே உனக்காக தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் !
By Aravind Selvam | Galatta | December 07, 2020 17:31 PM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக மூன்று மாதங்கள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.கொரோனா பாதிப்பு காரணமாக சில தொடர்களில் நட்சத்திரங்கள் மாற்றப்பட்டனர்.
சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.
அப்படி புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களில் ஒன்று பூவே உனக்காக தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது இந்த தொடர்.அருண்,ராதிகா ப்ரீத்தி,ஜோவிதா லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வந்தனர்.இதில் ஜோவிதா லிவிங்ஸ்டன் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த தொடரில் முக்கிய முன்னணி வேதமான கீர்த்தி என்ற வேடத்தில் நடித்து வந்த ஜோவிதா லிவிங்ஸ்டன் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடரில் இருந்து திடிரென்று இவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
KGF 2 Climax Glimpse | Rocky VS Adheera | New Picture goes viral!
07/12/2020 05:10 PM
OFFICIAL: Bigg Boss 4 sensation Samyuktha signs Vijay Sethupathi's next film!
07/12/2020 04:00 PM
Balaji says Shivani will be evicted soon | SEMMA TWIST - Bigg Boss 4 Promo
07/12/2020 03:11 PM
R.I.P.: Popular serial actress dies at the age of 34, due to Covid-19!
07/12/2020 01:00 PM