தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நடிகை விஜயசாந்தி ஞாயிற்றுக்கிழமை சந்தித்திருக்கிறார். இதன்மூலம்  காங்கிரஸ் கட்சியின் பிரச்சார குழு தலைவராக செயல்பட்ட நடிகை விஜயசாந்தி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.


ஐதராபாத் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை விஜய சாந்தி. தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்து நடித்துள்ளார். அதன்பின் அரசியலில் நுழைந்து 'தல்லி தெலங்கானா' என்னும் தனிக்கட்சியை தொடங்கினார். பின்நாட்களில் அதை கலைத்துவிட்டு கடந்த 1998-ஆம் ஆண்டில் பாஜகவில் சோந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின் பாஜகவில் இருந்து விலகி  தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சோந்தார். அப்போது ராஷ்டிர சமிதி சார்பில் மக்களவை உறுப்பினராக தோந்தெடுக்கப்பட்டார். பிறகு 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததோடு அக்கட்சியிலிருந்தும் விலகி கடந்த 2014-ஆம் ஆண்டு அவா் காங்கிரஸில் இணைந்தார். 


சமீபத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து 2 முறை பேச்சு வார்த்தை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை, மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, தெலங்கானா பாஜக தலைவா் பி.சஞ்சய்  உள்ளிடோர் மத்தியில் சந்தித்து பேசியிருக்கிறார். இதன் மூலம் தன் தாய் வீடான பாஜகவுக்கு அவர் மீண்டும் திரும்ப இருப்பதாக தெரிகிறது. நாளை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காத்தால், பாஜகவில் சமீபத்தில் குஷ்பு இணைந்தார். இப்பொழுது நடிகை விசயசாந்தி இணைகிறார். காங்கிரஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுப்பாடுகள் பெரிய அளவில் ஏற்பட்டு இருக்கிறது எனவும் கட்சியில் சுகமுகமின்மை இல்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.