கேரளாவில் இளம் பெண்ணின் பேச்சில் மயங்கி நேரில் பார்க்கச் சென்ற இளைஞனை, பெண் ஒருவர் தனது கும்பலுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி தன்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்யா என்ற இளம் பெண், அங்குள்ள மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் போனில் தொடர்ச்சியாக ராங் காலில் பேசி பழகி வந்து உள்ளார். தொடக்கத்தில் சாதாரணமாகப் பேசிய அந்த பெண், போக போக இணக்கமாகவும், நெருக்கமாகவும் பேசத் தொடங்கி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இருவரும் தொலைப்பேசியிலேயே மிகவும் நெருக்கமாகப் பேசி பழகி வந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர், இளம் பெண் ஆர்யாவின் பேச்சில் மயங்கி கிரங்கி கிடந்து உள்ளார். 

மேலும், “உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது” என்று, அந்த இளைஞர், இளம் பெண் ஆர்யாவிடம் கூறி இருக்கிறார்.

ஆனால், இளம் பெண் ஆர்யாவோ, இந்த வார்த்தைக்காகத் தான் நானும் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன் என்பது போல், “சரி, நாம் தனிமையில் சந்திக்கலாம்” என்று கூறி, அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சொகுசு ஹோட்டலுக்கு வரும் படி, இளம் பெண் ஆர்யாவும் கூறியிருக்கிறார்.

போனில் இனிக்க இனிக்க பேசிய இளம் பெண்ணை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில், அந்த இளைஞர் இளம் பெண் ஆர்யா சொன்ன ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அந்த குறிப்பிட்ட ஹோட்டல் அறையில், அந்த இளைஞருக்காக இளம் பெண் ஆர்யா காத்திருந்து உள்ளார். அதன்படியே, அந்த இளைஞரும் வரவே, தன்னுடைய அறைக்கு வரும் படி, அந்த இளைஞரை இளம் பெண் ஆர்யா அழைத்துள்ளார். அங்கு சென்றதும் அந்த இளைஞருக்கு மிகப் பெரும் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறைக்குள் ஏற்கனவே 4 இளைஞர்கள் பதுங்கி இருந்து உள்ளார்கள். 

இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர், ஒன்றும் புரியாமல் அந்த இளைஞர் நின்று கொண்டிருந்த நேரத்தில், இளம் பெண் ஆர்யா, அந்த இளைஞரை வலுக்கட்டாயமாகத் தன் அருகில் இழுத்து அவரின் துணிகளை அவிழ்க்க வைத்து உள்ளார். பின்னர், அந்த இளைஞரை மிரட்டியே நிர்வாணமாக நிற்க வைத்த அந்த பெண், தன்னுடைய செல்போனில் அந்த நிர்வாண இளைஞருடன் ஒரு போட்டோவும் எடுத்துக் கொண்டார். 

அந்த தருணத்தில், அந்த அறைக்குள் 4 இளைஞர்கள் இருந்ததால், அந்த இளைஞரால் அப்போது ஒன்றும் செய்ய முடிய வில்லை. 

அதன் தொடர்ச்சியாக, அந்த ஆபாச போட்டோக்களை காட்டி மிரட்டிய அந்த மிரட்டல் கும்பல், இந்த போட்டோவை வெளியில் கசிய விடாமல் இருக்க அந்த இளைஞனிடம் மிரட்டி உள்ளனர். அத்துடன், “நீஒரு பெண்ணுடன் நிர்வாணமாக இருப்பதை உனது குடும்பத்தினர் பார்த்தால் என்ன ஆகும் யோசித்துப் பார்?” என்றும், கடுமையாக மிரட்டி இருக்கிறார்கள்.

இதனால், ரொம்பவும் பயந்து போன அந்த இளைஞன், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அப்பாவியாகக் கேட்டு உள்ளார். இது தான் சாக்கு என்று, அந்த கும்பல் “மூன்றரை லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லை என்றால், இந்த போட்டோவை இணையத்தில் பதிவிட்டு விடுவோம்” என்றும், மிரட்டி உள்ளனர். ஆனால், “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை” என்று,  அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த இளைஞனிடம் இருந்த செல்போன், ஏடிஎம் கார்டு போன்றவற்றைப் பறித்துக் கொண்டனர். அத்துடன், இரவு முழுவதும் அந்த இளைஞரை ஒரு காரில் வைத்துக் கொண்டு சாலையில் அந்த கும்பல் சுற்றி வந்துள்ளது. அதோடு அந்த இளைஞரின் ஏடிஎம் கார்டை பயன் படுத்தி, அதிலிருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அந்த கும்பல் மிரட்டியே எடுத்துள்ளது. அந்த கும்பலின் மிரட்டல் எல்லை மீறி போகவே, ஒரு கட்டத்தில் “சிறுநீர் கழிக்க வேண்டும்” என்று கூறி, அந்த இளைஞர் காரில் இருந்து கீழே இறங்கி இருக்கிறார். அப்போது, அந்த கும்பல் தங்களது காரை சாலையோரமாக நிறுத்தி உள்ளது. 

அப்போது காரை விட்டு கீழே இறங்கிய அந்த இளைஞர், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டு கத்தி உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த கும்பல், அந்த இளைஞரை காரின் உள்ளே இழுக்க முயற்சி செய்து உள்ளார்கள். அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசார், இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்து அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். 

அப்போது, பாதிக்கப்பட்ட அந்த இளைஞன், “இவர்கள் என்னை கடத்தில் ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டுவதாக” கூறி அழுதிருக்கிறார். இதனையடுத்து, இளம் பெண் ஆர்யா, கடத்தல்காரன் யாசின், அஸ்வின், ஆசிப், ரிஷ்வான் ஆகிய 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும், இந்த கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது தொடர்பகா வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், “இந்த கும்பல் இதே போன்று வேறு ஏதேனும் மிரட்டல் சம்பத்தில் ஈடுபட்டுள்ளார்களா?” என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.