பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி நேரத்தில் பெண் ஊழியருடன் அதிகாரி ஒருவர் நெருக்கமாக இருந்த, வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
கர்நாடகா மாநிலத்திலுள்ள உள்ள பல்லாரி டவுன் கோட்டை பகுதியில் இருக்கும் நாராயணப்பா காம்பவுண்ட் பகுதியில், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி அனைத்து அரசு அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாராயணப்பா காம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் சம்பத் குமார் என்பவர், அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் பெண் ஒருவர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சம்பத்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலேயே வேலை நேரத்தில் சிரித்துப் பேசி கொண்டு காதலோடு இருந்ததாகவும், இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தாமல் ஒரே இடத்தில் இருந்த படியே, காதல் மழை பொழிந்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. 

அத்துடன், சில சமயங்களில் அவர்கள் இருவரும் அலுவலகத்திலேயே, காதல் என்ற பெயரில் எல்லை மீறி நடந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த விசயம், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிய வந்த நிலையில், இந்த காதலர்களின் செயல்பாடுகளால் சக ஊழியர்களும் சமயத்தில் முகம் சூழிக்கும் அளவுக்கு அவர்கள் நடந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வேலை செய்யும் இடத்திலேயே காதல் என்ற பெயரில் அட்டகாசம் செய்து வரும் அரசு அதிகாரி சம்பத் குமார் மீது, நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளிடம் சிலர் புகாரும் அளித்திருந்தனர். ஆனால், இதனை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. 

இந்நிலையில், அதிகாரி சம்பத் குமார் தனது காதலியுடன் பணி நேரத்தில் அலுவலகத்தின் ஒரு பகுதியில் மிகவும் நெருக்கமாகக் கொஞ்சிக்கொண்டு இருந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும், அந்த அரசு அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காதல் காட்சிகள், அந்த மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவை பார்த்த பலரும், அரசு அதிகாரி சம்பத் குமார், தன்னுடைய பணி நேரத்தில், பெண் ஊழியருடன் இப்படி நெருக்கமாக இருந்த இருந்த காரணத்தினால், அந்த அதிகாரியையும், அவரது காதலியான பெண் ஊழியரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம், கர்நாடகா மாநிலத்திலுள்ள உள்ள அரசு அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், காதலர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பணி நேரத்தில் காதல் என்ற பெயரில் நெருக்கமாக இருந்த இருவருக்கும் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.