டெல்லி காவல்துறையில் ஜூலை 6, 2006ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தவர் சீமா டாக்கா. பின், தென்கிழக்கு டெல்லி காவல் பகுதியில் தலைமை காவலராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்துள்ளார். அதில் 56 குழந்தைகள் 14 வயதிற்கும் குறைவானவர்கள். கண்டுபிக்கப்பட்டதில் பெரும்பான்மையான குழந்தைகள் கடந்த 12 மாதத்திற்குள் காணாமல் போனவர்கள்.

இதற்காக சீமா டாக்காவிற்கு காவல் உதவி துணை ஆய்வாளராக பணி உயர்வு அளித்து டெல்லி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காவலர் சீமா கூறுகையில், “நான் தடைகளின்றி தொடர்ந்து பணியாற்றுவேன். இப்பணிகளை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த குழந்தைகளை தில்லியில் இருந்து மட்டுமல்லாமல் மேற்குவங்கம், பஞ்சாப், பிகார் போன்ற மாநிலங்களில் இருந்து மீட்டுள்ளோம். மேற்குவங்கத்தில் 2018ஆம் ஆண்டு காணாமல் போன சிறுவன் தற்போது கிடைந்துள்ளான். இதுபோன்ற பல கடினமான சூழல்களை எதிர்கொண்டு இந்தக் குழந்தைகளை கண்டுபிடித்துள்ளோம்” என தெரிவித்தார்

இவர் மீட்ட குழந்தைகளில் 56 குழந்தைகள் 7 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், கடத்தப்பட்ட குழந்தைகளை மிட்டுள்ளார், இவர்.
 
டெல்லி மாநகர காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தா பதவி உயர்வை அறிவித்தன்படி, சீமாவுக்கு உதவி துணை-காவல் ஆய்வாளர் பணி தற்போது வழங்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையில், அவுட் ஆஃப் டர்ன் மூலம் பதவி உயர்வு பெற்ற முதல் காவலர் என்ற பெருமையை சீமா டாக்கா பெற்றுள்ளார்.

இந்த அனுபவம் குறித்து கூறிய சீமா, ``நான் ஒரு தாய், எந்த தாயும் தங்கள் குழந்தையை இழக்க விரும்பமாட்டார்கள். காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் கடிகாரத்தை போல சுற்றி வேலை செய்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``ஒரு கிராமத்திற்கு செல்ல வெள்ளத்தின்போதும் இரண்டு நதிகளை கடந்தோம். காணாமல் போய், மீட்கப்பட்ட சிறுவர்களில் சிலர் பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு பின்னர் தீவிர மது போதைக்கு அடிமையாகி இருந்தனர். பெரும் சவால்களுக்கு மத்தியில் அவர்களை திருத்தி குடும்பத்துடன் ஒப்படைத்துள்ளோம்" எனவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

வீரமான அம்மாவுக்கு, நம் வாழ்த்துகளும் சென்று சேரட்டும்!