பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு சற்று கடினமான டாஸ்க் வழங்கப்பட்டது. மணிக்கூண்டு என்ற இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஐந்து அணிகளாக பிரிந்து நேரத்தை கணிக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது. எந்த அணி குறைந்த அளவு வித்தியாசத்தில் நேரத்தினை கணிக்கிறதோ அந்த அணி தான் வெற்றியாளர் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் டாஸ்க் சொதப்பி லக்சுரி பட்ஜெட் பூஜ்யம் ஆன நிலையில் இந்த வாரம் பெரும்பாலான போட்டியாளர்கள் டாஸ்கை சிறப்பாகவே செய்தனர்.

பாலாஜி முருகதாஸ் மட்டுமே வழக்கம்போல இந்த வாரமும் சொதப்பினார். அதனால் அவரது அணி மூன்று மணி நேரத்தினை வெறும் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே கடத்திவிட்டது. இந்நிலையில் இந்த 45 மணி நேர மணிக்கூண்டு டாஸ்க் முடிவுபெற்று உள்ளது. காற்று, மழை, வெயில், குளிர் என பொருட்படுத்தாமல் போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கை செய்து முடித்து இருக்கிறார்கள்.

இதில் வெற்றி அணி எது என்பதை பிக்பாஸ் இன்று அறிவித்து இருக்கிறார். தற்போது வெளிவந்து இருக்கும் முதல் ப்ரொமோ வீடியோவில், போட்டியாளர்கள் அனைவரும் முடிவை தெரிந்துகொள்ள மிகவும் பீதியில் அமர்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் கணித்த நேரம் பற்றி வரிசையாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். 

அர்ச்சனா டீம் தான் மிகவும் குறைந்த அளவு வித்யாசத்தில் கணித்திருப்பதாக தெரிகிறது. அதனால் அர்ச்சனா மற்றும் டீம் கொண்டாட தொடங்கி இருக்கிறார்கள். இதில் வெற்றி பெற்ற 2 அணிகளில் இருக்கும் 6 போட்டியாளர்கள் அடுத்த வார தலைவர் டாஸ்கில் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்கள் என்றும் பிக் பாஸ் அறிவித்தார். 

அதனை கேட்டு வெற்றி பெற்றவர்கள் குஷியாகி உள்ளனர். 46 நாட்களான பிக்பாஸ் வீட்டில் இந்த வார எவிக்ஷன் யார் என்பதையும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர் திரை ரசிகர்கள். புள்ளி விவரத்துடன் பிக்பாஸ் வெளியிட்ட பட்டியலில் எந்த அணி ஜெயித்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நேற்றயை டாஸ்கின் போது பாலாஜி சொதப்பியிருந்தாலும், அறிவிப்பின் போது அதை பொருட்படுத்தி கொள்ளாமல் ஆர்வமாக உள்ளனர் பிக்பாஸ் வீட்டினர்.