சந்தானம் நடிப்பில் தீபாவளி விருந்தாய் திரைக்கு வந்த படம் பிஸ்கோத். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிட்டது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 

படத்தின் ட்ரைலரிலே பாகுபலி படத்தையும், 300 பருத்திவீரர்கள் படத்தையும் கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தது. லொள்ளு சபா பாணியில் படம் உள்ளது என பாராட்டி வருகின்றனர் நகைச்சுவை பிரியர்கள். ஆனந்தராஜ், ஜீவா, நான் கடவுள் ராஜேந்திரன், சவுகார் ஜானகி, மனோகர் ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர். நாயகியாக தாரா அலிஷா நடித்திருந்தார். 

18-ம் நூற்றாண்டில் வாழந்த அரசனாக அசத்தியிருந்தார் சந்தானம். கிட்டதட்ட 30 நிமிடம் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியது. 
பாடல்களின் லிரிக் வீடியோக்களை தொடர்ந்து ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. காலகேயர்களுடன் சண்டைக்கு செல்லும் காட்சி இந்த ஸ்னீக் பீக்கில் இடம் பெற்றுள்ளது. பாகுபலி படத்தின் காட்சிகளை கிண்டலடித்து காமெடி செய்துள்ளார் சந்தானம். கட்டப்பாவாக ராஜேந்திரன் நடித்துள்ளார். 

பிஸ்கோத் படத்தை தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார் சந்தானம். சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் மூன்று வித்தியாசமான போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.