பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. போட்டியாளர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் வழங்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க் முடிவுபெற்று அதன் வெற்றியாளர்களை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது இந்த இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் ரம்யா, ஆஜித் உள்ளிட்டவர்கள் அமர்ந்து ஷிவானி பற்றி மிகவும் கிண்டலாக பேசி இருப்பது காட்டப்பட்டு இருக்கிறது.

யார் என நினைக்கிறீர்கள், இந்த வாரம் யார் குறைந்த இன்வால்வ்மென்ட் என ஆஜித் கேட்க. உன் மனதில் இருக்கும் இரண்டு பேர் யாரு என ரம்யா பாண்டியன் இன்னொரு கேள்வியை கேட்கிறார். அதற்கு ஆஜித், ஷிவானி மற்றும் சுசித்ரா என தெரிவித்தார்.

ஷிவானி என்ன பண்ணா? என சம்யுக்தா சொல்ல, அவ எதுவும் பன்னல என்பதால் தான் சொல்கிறார் என ரம்யா தெரிவித்து உள்ளார். ஷிவானி பாலாவை என்டர்டெயின் பண்ற ஒரே வேலையை மட்டும் தான் பண்றா.. பாலா மாமா, பாலா மாமா என சுத்துறீங்க, வீட்ல என்ன சுவாரஸ்யம் கொடுத்தீங்கனு சொன்னீங்கனா நல்லா இருக்கும் என ரம்யா மேலும் பேசி ஷிவானியை கலாய்த்துள்ளார்.

பாலாஜியுடன் பிரேக்கப் ஆன பிறகு சம்யுக்தா மற்றும் ரம்யாவுடன் சேர்ந்துதான் சூப் சாங் பாடினார். பாலாவை விட்டு பிரிந்து வந்த, ஷிவானியை வெல்கம் டூ சிங்கிள்ஸ் கேங் என்று வரவேற்றார் ரம்யா. பாலாஜி ஷிவானி இடையிலான காதலை குறிப்பிட்டு, ஏற்கனவே காதல் பாலாஜியின் கண்ணை மறைக்குது என ஆரி நாமினேஷனுக்கான காரணமாக கூறினார். அதனால் கடுப்பான பாலாஜி, இங்கு யாரும் காதல் பண்ணல என யாரும் அப்படி பேசக்கூடாது என எச்சரித்தார்.

மணிக்கூண்டு டாஸ்க்கில் அர்ச்சனா டீம் முதலிடத்தை பிடித்தது காலை வெளியான ப்ரோமோவில் தெரியவந்துள்ளது. ஆரியின் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அர்ச்சனாவின் டீம் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற டீமை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 6 பேர் இந்த வார கேப்டன்ஸி டாஸ்க்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்றுள்ள ஹவுஸ்மெட்ஸ் தங்களின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.