பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வந்த பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான சித்ரா சென்னையில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தையும் , பிரபலங்கள் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

10 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் இருந்து வரும் இவர் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் சேனல்களிலும் வேலைபார்த்துவிட்டார்.இவர் மிகவும் துணிச்சலான பெண் என்று அவருடைய நண்பர்களும் பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.

இப்படி துணிச்சல் வாய்ந்த பெண் எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.மேலும் சித்ராவின் மரணத்திற்கு பிறகு வெளியான புகைப்படங்களில் அவரது முகத்தில் சில காயங்கள் இருப்பதை கவனித்த ரசிகர்கள் இது உண்மையிலேயே தற்கொலை தானா நடந்தது என்ன என்பது தெரியவேண்டும் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து சித்ராவின் தாயும் என் மகள் மிகவும் தைரியசாலி அவள் நிச்சயம் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டாள் என்று தெரிவித்தார்.இதனை தொடர்ந்து சித்ராவின் தந்தை சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.மேலும் சித்ராவிற்கு நிச்சயம் செய்யப்பட்ட ஹேமந்த்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சித்ராவின் மரணம் குறித்து சில நாட்களில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.