அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமத்திலும்  அதிவேக ஃபைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு கிடைக்கும் என்று முகேஷ் அம்பானி மோடி முன்னிலையில் உறுதி அளித்திருக்கிறார். ஜியோ நிறுவனத்தை தொடங்கிய நான்கு ஆண்டுகளில், தொலைத்தொடர்புத் துறையில் அதிக பங்கு வகிக்கும் நிறுவனமாக ஜியோ நிறுவனம் மாறியிருக்கிறது. 


இந்நிலையில் 5ஜி சேவைக்கான ஹார்டுவேர், சாப்ட்வேர் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஜியோ ஈடுபட்டு வருகிறது.  இறக்குமதியை குறைத்து சுயசார்பு தன்மையுடன் செயல்படுவதற்கு தீவிரமாக வேலை செய்து வருகிறோம். இந்தியாவில் 5 ஜி புரட்சியின் அவசியம் மிக முக்கியமானது. அதற்கு 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நாட்டில் முன்னோடியாக இருக்க ஜியோ உதவும் என உறுதியளிக்கிறேன் என்றியிருக்கிறார் முகேஷ் அம்பானி. 


மேலும் , உலகின் சிறந்த டிஜிட்டல் நாடுகளில் பட்டியலில் இந்தியா இருக்கிறது.  இந்த முன்னிலையைப் தக்கவைக்க , 5G-ன் வெளியீட்டை விரைவுபடுத்துவதற்கும் மற்றும் எல்லா இடங்களிலும் மலிவாக கிடைக்க செய்வதற்கும் கொள்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தற்போது சிப் வடிவமைப்பில் இந்தியா உலகத்தரம் வாய்ந்த பொருள்களை உருவாக்கியுள்ளது.


பிற நிறுவனங்களுக்கு முன்னதாக 5ஜி அதிவேக அலைக்கற்றை சேவையை உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பிளாக்செயின், பிக் டேட்டா ஆகியவற்றில் உலக தரத்தை உருவாகி இருக்கிறோம்.

இதனால் விவசாயம், நிதி சேவைகள் , வர்த்தகம் போன்றவற்றிக்கு பெரும் உதவியாக இருந்து இந்நியாவை முன்னிலைப்படுத்திருகிறது. மேலும் இதுப்போன்ற தளங்களில் எங்கள் சேவையின் தரம் நிரூபிக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பகுதிகளில் இருக்கும் சவால்களை எதிர்க்கொண்டு சேவை கொடுக்க இருக்கிறோம் “ என தெரிவிருத்திருக்கிறார்.