ஒரு தலைக்காதல் காரணமாக, கல்லூரி வளாகத்தில் வைத்தே தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை, ஒருதலைக் காதலன் கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பால செயின்ட் தாமஸ் கல்லூரியில் அபிஷேக் பைஜூ என்ற மாணவரும்,  நித்தின மோல் என்ற மாணவியும் உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பத்தில் பட்டப்படிப்பைப் படித்து வந்தனர்.

இதில், 3 ஆம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவியை, அங்குள்ள கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜூ என்ற அந்த இளைஞன், ஒரு தலையாகக் காதலித்து வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

ஆனால், அந்த பெண் அந்த இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ச்சியாக மறுத்து வந்திருக்கிறார். அத்துடன், அந்த இளைஞன் செய்யும் செயலால், அந்த இளைஞனை அந்த மாணவி, வெறுத்து ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், ஒருத்தலைக் காதலன் அபிஷேக் பைஜூ பல முறை, அந்த மாணவியிடம் சென்று தன்னுடைய காதலை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஆனாலும், அந்த மாணவி அவரை துளியும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், இன்றைய தினம் காலையில், ஒருதலைக் காதலன் அபிஷேக் பைஜூ மற்றும் மாணவி நித்தின மோல் ஆகியோர் மற்ற மாணவர்களோடு, இன்று நடைபெற்ற பட்டப்படிப்பின் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு அந்த கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த கல்லூரி வளாகத்தில் யாரும் எதிர்பார விதமாக அங்கு வந்த ஒருதலைக் காதலன் அபிஷேக் பைஜூ, அங்கிருந்த ஒரு பேப்பர் கட்டரை எடுத்து, தனது காதலியான அந்த மாணவி நித்தின மோளை கொடூரமான முறையில் வெட்டி உள்ளார். 

இதில், பயங்கர அலறல் சத்தத்துடன் அந்த மாணவி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.

இதனை அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த சக மாணவ - மாணவிகள், பதறிப்போய் உடனடியாக ரத்த வெள்ளத்தில் அந்த மாணவியை அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

அதே நேரத்தில், மாணவியை தாக்கி கொலை செய்த ஒருதலைக் காதலன் அபிஷேக் பைஜூ, அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளான். அப்போது. சக மாணவர்கள் அவனை பிடித்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மாணவரிடம் விசாரித்து வருகின்றனர். 

இந்த விசாரணையில், அபிஷேக் பைஜூ, தேர்வு எழுவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியே வந்த நிலையில், கல்லூரி மண்டபத்தில்  காத்திருந்து உள்ளார். அப்போது, அந்த மாணவி தன்னுடைய தேர்வை எழுதி முடித்துவிட்டு வந்தவுடன், திடீரென்று முன்னாடி வந்து நின்ற அவன், அந்த மாணவியிடம் சண்டை போட்டு உள்ளார். அப்போது, தான் அந்த பைஜூ, அந்த மாணவியை தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.