லாட்ஜில் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்த கள்ளக் காதல் ஜோடி, விடிந்ததும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த சூழலில் தான், நேற்று காலை இந்த தனியார் விடுதிக்கு ஒரு 30 வயதுதக்க ஒரு ஆணும், 40 வயதுதக்க பெண்ணும் தங்களை கணவன் - மனைவி என்று கூறிக்கொண்டு வந்திருக்கிறார்கள். 

அப்போது, அவர்கள் இருவரும் வேலூர் மாவட்டம் கனகாம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மோகன்ராஜ் என்ற முகவரியை கொடுத்து, அந்த விடுதியில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். 

அத்துடன், அந்த விடுதிக்கு காலையில் சென்றதும், விடுதியை விட்டு வெளியே சென்ற அவர்கள் இருவரும், புதுச்சேரியில் உள்ள பல இடங்களைச் சுற்றி பார்த்து விட்டு, மாலையில் மீண்டும் விடுதிக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் தான், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் அப்படியே மூடி இருந்து உள்ளது. 

இதனால், சற்று சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், முதலில் கதவை தட்டிப் பார்த்து உள்ளனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாத நிலையில், அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த ரூமின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.

அப்போது, அந்த ரூமில் உள்ள மின் விசிறியில் 40 வயதான மோகன்ராஜிமும், 30 வயான அந்த பெண்ணும் மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிய நிலையில் இருந்தனர். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், அவர்களது உடமையில் அவர்கள் இருவரும், “காட்பாடியில் இருந்து சென்னை வந்ததற்கான ரயில் டிக்கெட்” இருந்து உள்ளது

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்துகொண்ட இவர்கள் இருவரும் கள்ளக் காதல் ஜோடியாக இருக்கலாம் என்றும், இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துவிட்டு, அதன் பிறகு இவர்கள் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்றும், முதற்கட்ட தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.