சென்னையில் குடும்ப பிரச்சனையை நண்பனிடம் நம்பி சொன்ன பெண்ணை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு தன் பழைய காதலனுடன் சேர்ந்து மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப பிரச்சனையை 3 வது நபரிடம் சொன்னால், என்ன மாதிரியான விபரீதங்கள் ஏற்படும் என்பதற்கு, சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவமே ஒரு உதாரணம்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கணவர் மற்றும் தன்னுடைய 2 குழந்தைகளுடன் வசித்து வந்து உள்ளார்.

குடும்ப பெண் திவ்யா, தன் கணவருடன் சேர்ந்து சென்னையிலேயே தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார். 

அந்த நிறுவனத்தில் ரத்தினக்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இதனால், அலுவலக பணியின் போது, ரத்தினக்குமாரின் செயல்பாடுகள் பிடித்துப் போகவே, அவரிடம் திவ்யா நட்பாகப் பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளைப் பற்றி, நண்பன் என்று நம்பிக்கையில் திவ்யா, ரத்தினக்குமாரிடம் கூறி, தன்னுடைய சோகத்தைப் பகிர்ந்துகொண்டு உள்ளார். 

இப்படியாக, தன் குடும்ப பிரச்சனை ஒவ்வொன்றாக தன் நண்பரிடம் கூறிய நிலையில், ஒரு கட்டத்தில் தன்னுடைய பழைய காதல் கதை குறித்தும், ரத்தினக்குமாரிடம் கூறி உள்ளார்.

அப்போது, திருமணத்திற்கு முன்பான தன்னுடைய பழைய காதலன் வினய் கல்யாண் பற்றிய முழு விபரங்களையும், ரத்தினக்குமார் கேட்டுத் தெரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ரத்தினக்குமாரின் பேச்சும் செயலும் வேறுமாதிரியாக இருந்துள்ளது. அதாவது திவ்யாவை மிரட்டித் தொடங்கி உள்ளார்.

குறிப்பாக, “நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால், உன்னைப் பற்றிய எல்லா ரகசியத்தையும் நம் அலுவலகத்தில் உள்ளவர்களிடமும் உன் கணவன் உட்பட பலரிடமும் சொல்லி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்று மிரட்டத் தொடங்கி உள்ளான்.

இதனால், வேறு வழி தெரியாத திவ்யா, ரத்தினக்குமார் சொற்படி கேட்டு நடந்துள்ளார். அதன்படி, வாட்ஸ்ஆப் மூலம் திவ்யாவின் நிர்வாண படங்களைக் கேட்டு மிரட்டி உள்ளார். அந்த பெண்ணும் பயந்து போய் தன்னுடைய நிர்வாண படங்களை அவனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, திவ்யாவை வீடியோ கால் செய்ய வைத்து அதில் நிர்வாணமாக திவ்யாவை நிற்கச் சொல்லி, அதையும் தன் போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு உள்ளார். 

இதனையடுத்து, “உன் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவேன்” என்று மிரட்டியே, திவ்யாவை ரத்தினக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், அதையும் ரத்தினக்குமார் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, திவ்யாவை தான் நினைக்கும் போதெல்லாம் தன்னிடம் வந்து படுக்க வேண்டும் என்று மிரட்டியே பல முறை திவ்யாவை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

இப்படி திவ்யாவை ஒவ்வொரு முறையும் பாலியல் பலாத்காரம் செய்ததை, தன் போனில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு இருந்துள்ளான். 

மேலும், திவ்யாவின் முன்னாள் காதலனான வினய் கல்யாண் உடன் நட்பாகப் பேசி பழகிக்கொண்டு, அவருடன் சேர்ந்து கொண்டு மேலும் மேலும் திவ்யாவை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். 

இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட திவ்யா, ஒரு கடத்திற்கு மேல் பொறுத்துப் போக முடியாது என்று முடிவு எடுத்து, தன் கணவரிடம் நடந்த எல்லாவற்றையும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து, கணவரின் ஆலோசனையின் பேரில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார்.

அத்துடன், “ரத்தினக்குமாரின் இமெயிலில் என்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளதாகவும்” கூறி உள்ளார்.

அதேபோல், “என் நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் 3 பெண் ஊழியர்களையும் இதே போன்று மிரட்டி அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்றும், அதனை எல்லாம் வீடியோவாக எடுத்து தன்னுடைய நண்பர்களுக்கும் அவன் அனுப்பி வைத்துள்ளான்” என்றும், திவ்யா பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், தலைமறைவாக இருக்கும் ரத்தினகுமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.