“உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கடவுள் கையில் தான் உள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா என்ற பகுதியில் ரவுடிகள் சிலர் சேர்ந்து, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு, அவரை வீட்டின் 2 வது மாடியில் இருந்து ரோட்டில் தூக்கிப்போட்டனர். இதனால், மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், 17 வயது சிறுமியை, 3 இளைஞர்கள் சேர்ந்து மாடியிலிருந்து தூக்கி கீழே வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்கில் கருத்து தெரிவித்த பலரும், சம்மந்தப்பட்ட 3 குற்றவாளிகளையும், மிக கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும், அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்றும், மிக கடுமையாக விமர்சித்தும், கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதன் படி, “உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அங்கு, மக்கள் உயிர் பயத்தில் நடுங்குகிறார்கள், ஆனால் அரசாங்கம் தூக்குகிறது” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

குறிப்பாக, “உத்தரப் பிரதேசம், மதுராவில் ரவுடிகளின் அட்டகாசத்தால் சிறுமி உயிருக்குப் போராடுகிறாள். காட்டாட்சியில், பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது” என்றும், உத்தரப் பிரதேச மாநில பாஜக ஆட்சியை அவர் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அதே நேரத்தில், “நாட்டில், எதிர்க்கட்சி தலைவர்களை மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை என்றும், டிவிட்டரில் மட்டுமே காண முடிகிறது” என்றும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்து உள்ளார்.

அதே நேரத்தில், “சூரத்தை சேர்ந்த பர்னேஷ் மோடி என்ற எம்.எல்.ஏ. “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒட்டு மொத்த மோடி சமூகத்தினரையே இழிவுபடுத்திப் பேசி விட்டதாகக் கூறி அவர் மீது குற்ற அவதூறு வழக்கு” தொடர்ந்தார்.

சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், தனது இறுதி வாக்குமூலத்தைச் சமர்ப்பிப்பதற்காக இன்றைய தினம் ராகுல் காந்தி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வர உள்ளது குறிப்பிடத்தக்கது.