பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல நடிகரான அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது ஜூலை மாதத்தில் உறுதிசெய்யப்பட்டது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், "எனக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவமனை நிர்வாகம் அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து எனது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

இந்த சூழலில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியது.
இப்படி பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இந்திய அளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இம்மாத தொடக்கத்தி (ஆக.2) அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். கோன் பனேகா குரோர்பதி என்கிற நிகழ்ச்சியின் முதல் மூன்று சீஸன்கள் 2000 முதல் 2007 வரை ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010 முதல் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 3-வது சீஸனை ஷாருக் கான் தொகுத்து வழங்கினார். இதர 10 சீஸன்களின் நிகழ்ச்சிகளையும் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார்.

அமிதாப் பச்சன் (77), கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

இந்நிலையில் கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் மீண்டும் தொகுத்து வழங்குகிறார். 

கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதைச் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன். அவர் கூறும்போது,

``படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். எங்குப் பார்த்தாலும் நீல வண்ண பிபிஇ கிட். கே.பி.சி 12 நிகழ்ச்சிக்காக. இதன் முதல் சீசன், 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 20 வருடங்கள் ஆகிவிட்டன" என்று கூறியிருக்கிறார்.

மகாராஷ்ட்ராவில் நடக்கும் இந்த படப்படிப்பு தளத்தில், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் சினிமா சங்கம் வழக்கு தொடர்ந்து 65 வயதுக்கு மேல் உள்ளவர் படப்பிடிப்பில் பங்கேற்க கூடாது என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்துதான் அமிதாப் படப்பிடிப்புக்கு சென்றார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ``50 வயதுக்குள் உள்ளவர்கள்தான் வேலைக்குச் செல்லவேண்டும் என அரசு சொன்னது. இதனால் 78 வயதான நான் என்ன செய்வது என்று அதிர்ச்சி அடைந்தேன்" என்று சொன்னதாக தெரிகிறது. தற்போது மத்திய அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது. வீட்டில் கொரோனா பயத்தில் முடங்காமல் கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அமிதாப்.