தீராத காம வெறியால், ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளக் காதலில் இருந்த மனைவி, தன் கணவனை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த 50 வயதான கிஷன் தியகி - 30 வயதான இவரது மனைவி பிரியங்கா தம்பதியினர் வசித்து வந்தனர்.

தன்னுடைய கணவருக்கு 3, 4 வயது தான் குறைவாக இருக்கும் என்று அவரது மனைவி யோசித்திருந்தார். ஆனால், கணவன் கிஷன் தியகியை விட அவரது மனைவி பிரியங்காவுக்கு 20 வயது குறைவு என்ற விசயம் திருமணத்திற்குப் பிறகு தான், மனைவி பிரியங்காவுக்கு தெரிய வந்தது. இதனால், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். இதனால், மனதிற்குள் கணவனை வெறுத்து ஒதுக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தன்னுடைய கணவன் தன்னை விட 20 வயது மூத்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தார்.அந்த சமயத்தில், தன்னுடைய சகோதரியின் நண்பர் பர்மா என்பவருடன், பிரியங்காவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கள்ளக் காதலன் பர்மா உடன், பிரியங்கா அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தன் கணவருக்கு சந்தேகம் வராதபடி, அவருடனும் பிரியங்கா தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தார்.

ஒரு கட்டத்தில் பிரியங்காவின் தீராத காம வெறியால், தனது கள்ளக் காதலன் பர்மாவின் சகோதரர் கரண் என்பவருடனும், பிரியங்காவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தனது கள்ளக் காதலர்கள் பர்மா மற்றும் கரண் ஆகிய இருவருடனும் அவர் தொடர்பில் இருந்து வந்ததுடன், அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தனது கள்ளக் காதலனை விட்டு தனியாகப் பிரிந்து இருக்க முடியாத பிரியங்கா, தனது கணவரிடம் கரண் தன்னுடைய உறவினர் என்று பொய் சொல்லிவிட்டு, தன் வீட்டிலேயே தங்க வைத்து தினம் தினம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார்.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், கணவன் கிஷன் தியகி வீட்டில் இருப்பதால், அவர்கள் நினைத்த நேரத்தில் உல்லாச இன்பத்தில் ஈடுபட முடியவில்லை என்று தெரிகிறது. இதனால், தனது 2 கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து, தனது கணவனைக் கொலை செய்ய அவரது மனைவியே திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 18 ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் கணவன் கிஷன் தியகி தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவரது மனைவி பிரியங்கா, தனது கள்ளக் காதலர்களான பர்மா மற்றும் கரண் ஆகிய 3 பேருமாகச் சேர்ந்து கிஷனின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர். அதன் பிறகு, அவரை தூக்கில் தொங்க விட்டு உள்ளார். 

இதன் பிறகு, கள்ளக் காதலர்களான பர்மா மற்றும் கரண் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், தன் கணவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார் பிரியங்கா. அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக” கூறி உள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்தபடியே, தனது உறவினர்களுக்கு போன் செய்து, “என் கணவர் கிஷனுக்கு ஃபுட் பாய்சன் ஆகி விட்டது. அவர் இறந்துவிட்டார்” என்று கூறி உள்ளார்.

ஆனால், கிஷன் கழுத்தில் காயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவர் மன அழுத்தம் காரணமாகத் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் மனைவி பிரியங்கா மீண்டும் கூறியிருக்கிறார். இதன் காரணமாக, சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், இதனைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், கணவரின் இறுதிச் சடங்கில் மனைவி பிரியங்கா அழாமல், எந்த சலனமும் இல்லாமல் எப்போதும் போல் இயல்பாகப் பேசி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்குச் சந்தேகம் வந்துள்ளது.

இந்த தகவலும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவரது மனைவி பிரியங்காவை போலீசார் தனியாக அழைத்துச் சென்று தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.