மேற்கு வங்கத்தில் தனியாக வசித்து வந்த பழங்குடியின பெண் 5 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம் பிர்பம் மாவட்டம் போர் பந்த் பகுதியில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

பிர்பம் மாவட்டம் போர் பந்த் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அந்த தம்பதிக்குக் குழந்தை இல்லாத நிலையில், கணவனை இழந்த அந்த பழங்குடியின பெண், தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால், எந்த வேலைக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தாலும், அந்த பெண் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்று வருவது வழக்கம். 

அதன்படி, கடந்த 18 ஆம் தேதி மாலை வேலை விசயமாக தனக்குத் தெரிந்த உறவினர் ஒருவரைச் சந்திக்கச் சென்று உள்ளார். அவரை சந்தித்துவிட்டு சிறுது நேரத்தில், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவர் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த வழியாக வந்து, அந்த பெண்ணை வழிமறித்து நின்று உள்ளனர். இதனால், அந்த பெண்ணும், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழி விடுமாறு கேட்டு உள்ளார்.

அந்த தருணத்தில், அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுப்பது போல், அருகில் சென்று, அந்த பெண்ணை அந்த 5 பேர் கொண்ட கும்பல், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குத் தூக்கிச் சென்று மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

காம வெறி எல்லாம் தீர்ந்த பிறகு, “இது குறித்து வெளியே சொன்னாலோ, புகார் அளித்தாலோ கொன்று விடுவோம்” என்றும், அந்த கும்பல், அந்த பழங்குடியின பெண்ணை மிரட்டி எச்சரித்து அனுப்பி உள்ளது.

இதனையடுத்து, அந்த பெண் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டிற்கு வந்துள்ளார். அந்த பெண்ணை பார்த்த அங்குள்ள அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்க, அந்த பெண்ணிற்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாக போலீசாருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அங்க விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அதன்படி, அந்த பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த 5 பேருக்கு எதிராகப் பெண்கள்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, தனியாக வசித்து வந்த பழங்குடியின பெண் 5 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்கத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.