தன்னுடைய கள்ளக் காதலை மறைக்க, கள்ளக் காதலன் மீது பெண் ஹவுஸ் ஓனர் பாலியல் புகார் கூறி நாடகம் ஆடியது வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள யூதரின் ஜஹாங்கிர்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

அந்த வீட்டில் 23 வயது இளைஞர் விஷால் என்பவர் குடியிருந்து வந்தார். விஷால், அந்த பகுதியில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்த வந்து உள்ளார்.

அப்போது, விஷாலுக்கும் அந்த வீட்டின் பெண் ஹவுஸ் ஓனருக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் பேசப்படுகிறது.

இந்த கள்ளக் காதல் விவகாரம், பெண் ஹவுஸ் ஓனரின் கணவருக்குத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவர், தன் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வெறுத்துப்போன கணவன், மனைவியை பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகும், விஷாலுக்கும் அந்த வீட்டின் பெண் ஹவுஸ் ஓனருக்கும் இடையே கள்ளக் காதல் மேலும் தொடர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி “விஷால் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக” அந்த வீட்டின் பெண் ஹவுஸ் ஓனர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “என் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் விஷால் என்ற இளைஞர், வாடகை கொடுக்கும் சாக்கில் அடிக்கடி என் வீட்டிற்கு வருவதாக” குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “எனது கணவர் வேலைக்காக ராஜஸ்தான் சென்று இருந்த நேரம் பார்த்து, ஊரடங்கு காரணமாக அவர் வீட்டிற்குத் திரும்ப முடியாமல் அங்கேயே  சிக்கித் தவித்தார் என்றும், இதனால் வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்ததாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இப்படியாக வீட்டில் தனியாக இருக்கும்போது, சம்பவத்தன்று, வாடகை தருவதாக வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டு இருந்த விஷால், சிறிது நேரத்தில், தேநீர் போட்டுத் தந்து வலுக்கட்டாயமாக அதைக் குடிக்க வைத்தார் என்றும், அதை நான் குடித்ததும் மயக்கம் வர ஆரம்பித்தது என்றும், அதன் பிறகு அவர் என் ஆடைகளை அகற்றத் தொடங்கி, என்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்” என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும், “அந்த மயக்கத்திலும் நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் என்னைத் தாக்கிவிட்டு, என்னையும் என் 2 குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகவும்” அவர் மிரட்டினார் என்றும், அவர் குற்றம்சாட்டி இருந்தார். 

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட ஜேவார் காவல் நிலையபோலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதாவது விசாரணையில், “அந்த வீட்டின் பெண் ஹவுஸ் ஓனர், விஷாலுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. அத்துடன், அந்த பெண்ணின் கணவருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால் தான், மனைவியை விட்டு அவர் பிரிந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தன் மீது உள்ள குற்றத்தை மறைப்பதற்காக, தன்னுடைய கள்ளக் காதலன் மீது, அந்த பெண் புகார் கூறி தப்பித்துக்கொள்ள நினைத்தபோது, இப்படி வந்து சிக்கிக்கொண்டார்” என்றும், போலீசார் தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.