கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  

வரும் 13ஆம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ள முதலமைச்சர், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.

கொரொனா நோய்த் தொற்றல் உலகம் முழுவதுமே அச்சத்தை அளித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் தினந்தோறும் கோரோனா நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இவர்களில் தமிழகம் வந்த 6,700 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 924 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 980 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4796 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 11,97,336- ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 9) 5,185 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,288 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்தது. அதேநேரத்தில் இன்று  5,357 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 5,91,811 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 44,197 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 97,087 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 81,41,534 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இன்றைய நிலவரம்: 10-10-2020

கொரோனா பாதிப்பு - 5,185
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 44,197 
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 97,087 
குணமடைந்து வெளியேறியவர்கள் -  5,357
இறப்பு - 68

இந்நிலையில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 107 பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணையை வழங்கினார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக பணியாற்றுவதாகவும், தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக உள்ளதாகவும் முதல்-அமைச்சரை பிரதமர் பாராட்டி உள்ளார்.

``பள்ளிகள் திறப்பதற்கு தற்போது எந்தவித சாத்திய கூறுகளும் கிடையாது. ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் 26 மாணவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்ற அடிப்படையில் இந்த அரசு, பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது. அதன் பிறகு முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை ஒருங்கிணைந்து ஒரு கூட்டம் நடத்தி ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும். வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" 

இதில் அமைச்சர் பென்ஜமின், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் உள்ள சர்.ராமசாமி முதலியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 169 பள்ளிகளுக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்