மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 10 தேதி இவர்களுக்கு பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. 


இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சின்னச்சாமி  சிவப்பிரியங்கா, இருவரும் மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக நேற்று நள்ளிரவு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அக்குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிசுவின் முகத்தில் காயங்கள் இருந்ததை கண்டு குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, காவல்துறை புகார் அளித்துள்ளனர். இதன்பிறகு குழந்தையின் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. 


காவல்துறையின் விசாரனையில், மூன்றவதும் பெண் குழந்தை என்பதால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிசுவின் மூக்கை அழுத்தி பிடித்து , குழந்தையின் பாட்டி நாகம்மாள் கொன்றதாக தெரியவந்துள்ளது. நாகம்மாளை போஸீஸார் கைது செய்து, இந்த கொடூர செயலில் பெற்றோருக்கும் தொடர்பு உள்ளதா என விசாராணை நடந்தி வருகிறார்கள். 

தமிழகத்தில் மதுரை, தேனி, உசிலம்பட்டி  ஆகிய மாவட்டங்களில் பெண் சிசு கொலை அதிகம் நடப்பதால், இந்த மூன்று மாவட்டமும் அரசின் சிறப்பு கண்காணிப்புக்குள் வந்தன. இதுபோன்ற பெண் சிசுக் கொலையைத் தடுக்கவே 1992-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். பெண் சிசு கொலைக்கு எதிராக பெருமளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டு தான் உள்ளது.