மகனுக்கு ஜாமீன் கேட்டுச் சென்ற பெண்ணிடம் மசாஜ் செய்ய சொன்ன போலீஸ்!

மகனுக்கு ஜாமீன் கேட்டுச் சென்ற பெண்ணிடம் மசாஜ் செய்ய சொன்ன போலீஸ்! - Daily news

“உன் மகனுக்கு ஜாமீன் வேணும்னா எனக்கு மசாஜ் பண்ணனும்” என்று, போலீசார் ஒருவர் அடாவடி செய்த நிலையில், வேறு வழியில்லாமல் அந்த பெண், போலீசாருக்கு மசாஜ் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா என்னும் காவல் நிலையத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த அப்பாவி பெண் ஒருவர் வந்து உள்ளார்.

அதாவது, அந்த பெண் தனது மகனுக்கு ஜாமீன் கோரி மனு அளிக்க வந்திருக்கிறார்.

அப்போது, அந்த காவல் நிலையத்தில் இருந்த போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹா, அந்த பெண்ணின் அழகைப் பார்த்து சபலமடைந்து உள்ளார்.

இதனையடுத்த, அந்த பெண்ணிடம் இருந்து மனுவைப் பெறாமல், “நீ எனக்கு மசாஜ் செய்து விட்டால், நான் உன் மகனுக்கு ஜாமீன் வழங்குகிறேன்” என்று, அடவடியாய் கூறியிருக்கிறார்.

இதனால், அந்த பெண் கடும் தர்மசங்கடத்திற்கு ஆளான நிலையில், வேறு வழியில்லாமல் தனது மகனை எப்படியும் ஜாமீனில் எடுக்க வேண்டும் என்பதால், அந்த பெண்ணும் அந்த போலீசாருக்கு மசாஜ் செய்து உள்ளார். 

அதே நேரத்தில், இது குறித்த வீடியோ ஒன்றும், அந்த பகுதி முழுவதும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான அந்த வீடியோவில், “அந்த போலீஸ் அதிகாரி, சட்டையில்லாமல் கட்டிலில் அமர்ந்திருக்க, குறிப்பிட்ட அந்த பெண் அந்த போலீஸ் அதிகாரிக்கு மசாஜ்” செய்து விடுகிறார். 

அத்துடன், அந்த வீடியோவில் “அந்த போலீஸ் அதிகாரி, மசாஜ் செய்யும் அந்த பெண்ணின் வழக்கு பற்றி பேசிக்கொண்டு” இருக்கிறார்.

பின்னர், இந்த  வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

குறிப்பாக, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளதாக அந்த மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பான வீடியோ, போலீஸ் அவுட்போஸ்டில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment