கல்லூரி மாணவிக்கு வன்கொடுமை செய்தவன் கைது!

கல்லூரி மாணவிக்கு வன்கொடுமை செய்தவன் கைது! - Daily news

காஞ்சிபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டனை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று  மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில் 22 வயதுடைய மூன்றாவது மகள் சென்னையில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள்  அனைவரும் ஒரே வீட்டில்  தனித்தனி அறையில் வசித்து வரும் நிலையில் புதன் கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க சென்றுள்ளனர். இந்நிலையில், இரவு 2 மணி அளவில் வீட்டில் மாடியில் உள்ள தனது அறையில் தனியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, அறை கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம் கேட்டு வந்த கல்லூரி மாணவி கதவை திறந்து பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் அறையின் உள்ளே நுழைந்து, நெற்றியில் கையால் தாக்கி, கையை முறுக்கி பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீட்டின் பின்புறம் உள்ள மரத்தின் வழியாக இறங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் செய்வதறியாது திகைத்த கல்லூரி மாணவி இது குறித்து தனது அக்காவிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவி கோவூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேரில் வந்த போலீஸார் சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் வண்டலூர் - மீஞ்சூர்  சாலையில் வைத்து சதீசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார்  நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில்: சதீஷ் அதேபகுதியில் உள்ள தண்ணீர் கம்பெனியில் வேலைக்கு செல்வது வழக்கம். இவர் வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை பார்த்தபடி சென்றுள்ளார். மேலும் சதீஷ் ஆண் நபர்கள் இல்லாத வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர் என்பதால் அந்த வீட்டை குறித்து விசாரித்துள்ளார். 

இந்நிலையில் சம்பவத்தன்று கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கதவை தட்டியுள்ளார். தனது அக்கா தான் கதவை தட்டுகிறார் என நினைத்து அந்த பெண் கதவை திறந்தவுடன் பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார். மேலும் வீட்டில் இருக்கும் செல்போன், பணம், நகை ஆகியவற்றை தரும்படி கேட்டுள்ளார்.  தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த பெண் கூறியதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

மேலும் கஞ்சா போதையில் அங்கேயே படுத்து உறங்கி விட்டு தனக்கு இரண்டு நாட்களில் ரூ.10 ஆயிரம் தயார் செய்து கொடுக்க வேண்டும் எனவும்,  இதனை வெளியே சொல்ல கூடாது எனவும் கூறி மிரட்டி விட்டு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளான். மேலும் போலீசார் சதீஷை கைது செய்யும்போது தப்பியோட முயன்றதில் ஒரு கை, காலில் எலும்பு முறிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
 

Leave a Comment