“காத்துவாக்குல 4 காதல்” 4 காதலிகளை ஏமாற்றி 5 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த காதலன்!

“காத்துவாக்குல 4 காதல்” 4 காதலிகளை ஏமாற்றி 5 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த காதலன்! - Daily news

“காத்துவாக்குல 4 காதல்” என்ற கணக்கில், 4 காதலிகளை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு, 5 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

புதுச்சேரியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள இடையார்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

இந்த பெண், கடந்த 11 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்துபோது, எலிமருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்து உள்ளார். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர், அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணுக்கு தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பேரில் லாஸ்பேட்டை போலீசார், தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை அந்த பெண் பணியாற்றிய அதே நிறுவனத்தில் பணியாற்றும் லாஸ் பேட்டை கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த 26 வயதான கணேஷ் என்ற இளைஞர், கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார்.

இப்படியான நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பெண்ணை, அந்த காதலன் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துவிட்டு, அந்த பெண்ணை அவன் அங்கேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். 

ஆனால்,  இதனை மறைத்துவிட்டு, காதலன் கணேஷ் கடந்த 15 ஆம் தேதி கடலூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததுக்கொண்டு இருக்கிறார். 

இதனால், தான் காதலனால் ஏமாற்றப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

அத்துடன், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீசார், இந்த வழக்கினை நம்பிக்கை மோசடி மற்றும் பாலியல் பலாத்கார வழக்காக மாற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு, ஏமாற்றிய காதலன் கணேஷை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான், காதலன் கணேஷை, அவனது வீட்டின் அருகில் வைத்தே, போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணேஷ் ஏற்கனவே அந்த பகுதியைச் சேர்ந்த 4 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி மோசடி செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment