“மனசாட்சி உள்ள கள்ளக் காதல்!” மனைவி, கணவன், கள்ள காதலி அடுத்தடுத்து தற்கொலை! “அப்படி என்னதான் பிரச்சனை?”

“மனசாட்சி உள்ள கள்ளக் காதல்!” மனைவி, கணவன், கள்ள காதலி அடுத்தடுத்து தற்கொலை! “அப்படி என்னதான் பிரச்சனை?” - Daily news

கள்ளக் காதல் விவகாரத்தில் கணவன் - மனைவிக்குள் சண்டை வந்த நிலையில், முதலில் மனைவியும், பின்னர் கணவனும், அதன் தொடர்ச்சியாக கள்ளக் காதலியும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் இன்ஜினீயராக சோம்நாத் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த சோம்நாத்துக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இவருக்கு வேதா என்ற மனைவி இருந்தார். 

இப்படியாக, கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தான், இந்த குடும்பத்தில் கள்ளக் காதல் எட்டிப் பார்த்து, குடும்பத்தையே சிதைத்து உள்ளது.

அதாவது, அனல்மின் நிலையத்தில் சோம்நாத் இன்ஜினீயராக பணியாற்றி வந்த நிலையில், அதே அனல்மின் நிலையத்தில் பெண் இன்ஜினீயராக பார்வதி என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், ஆண் இன்ஜினீயரான சோமநாத்துக்கும், பெண் இன்ஜினீயரான பார்வதிக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, கள்ளக் காதலர்கள் இருவரும், அந்த பகுதியில் ஜோடியாக ஊர் சுற்றி உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இப்படியாக, இந்த ஜோடி அடிக்கடி தனிமையான இடத்தில் சந்தித்து உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில், கணவனின் இந்த கள்ளக் காதல் விசயம், சோம்நாத்தின் மனைவியான வேதாவுக்கு தெரிய வந்து உள்ளது.

இதனால், அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை புயலாக வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால், மனம் வெறுத்துப் போன மனைவி வேதா, தனது வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவன் சோம்நாத், “நமது கள்ளக் காதலால், நம்ம மனைவி தற்கொலை செய்துகொண்டுவிட்டாரே?” என்று, தனக்கு தானே வேதனைப்பட்ட சோமநாத், வாழ்க்கையை வெறுத்துப் போனவராய், அவரும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விசயத்தை கேள்விப்பட்ட, சோம்நாத்தின் கள்ளக் காதலியான பார்வயதியும், “நம்முடைய கள்ளக் காதலால், அநியாயமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டு, பலியாகி விட்டதே?” கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வேதனைப்பட்டு பார்வதியும், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலைகள் பற்றி போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படியாக, கள்ளக் காதல் விவகாரத்தில் முதலில் மனைவி, பின்னர் கணவன், அடுத்து கள்ளக் காதலி என்று, அடுத்துடத்து வரிசையாக 3 பேர் தற்கொலை செய்துகொண்டது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment