“சம்சாரம் என்னை சந்தோஷமா வச்சுக்கல..” 25 வயது இளம் பெண்ணை கல்யாணம் செய்த 50 வயது நபரின் பரிதாப நிலை!

“சம்சாரம் என்னை சந்தோஷமா வச்சுக்கல..” 25 வயது இளம் பெண்ணை கல்யாணம் செய்த 50 வயது நபரின் பரிதாப நிலை! - Daily news

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 50 வயதான நபரை 25 வயதான இளம் பெண் திருமணம் செய்திருந்த நிலையில், தற்போது அந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு விநோதமான கல்யாணமும், அதன் தொடர்ச்சியான இந்த தற்கொலை சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா என்ற இளம் பெண், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவரை திருமணம் செய்திருந்தார்.

இந்த இளம் பெண்ணின் திருமணத்திற்கு பிறகு, அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர், அதன் பிறகு வீடு திரும்பாமல் மாயமாகி உள்ளார். கணவனை எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், இது குறித்து மேகனா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து உரிய பதில் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், தனிமையில் தவித்து இருந்து வந்த மேகனா, 2 வது திருமணம் செய்ய முடிவு செய்தார். 

மேனகாவுக்கு சிக்கதனேகுப்பே கிராமத்தை சேர்ந்த 50 வயதான சங்கரண்ணா என்பவர் அறிமுகம் ஆகி, 25 வயதான மேகனாவுடன் பழகி உள்ளார். இவர்களுக்கு இடையேயான இந்த பழக்கத்தில் அவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி வந்து உள்ளனர். அப்போது, 25 வயதான இளம் பெண் மேகனா, சங்கரண்ணாவை திருமணம் செய்ய முடிவு செய்து, தனது முடிவை அவரிடம் அந்த பெண் கூறியிருக்கிறார். 

பேரன் பேத்தி எடுத்த சங்கரண்ணாவும், அந்த பெண்ணின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோயிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாலை மாற்றி முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். 

இதனையடுத்து, சங்கரண்ணா- மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை, மேகனா, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட, அது இணையத்தில் பெரும் வைரலானது. இதனால், சங்கரப்பா அந்த மாநிலம் முழுவதும் மிகுந்த பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருமணம் முடிந்த பிறகு சங்கரப்பா தனது மனைவியுடன் அடிக்கடி டூயட் பாடி, ஆடுவதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

இப்படியக, இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை தாண்டி, கணவன் - மனைவியான இவர்கள் இருவரும் மிகவுமு் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சினை உருவெடுத்து உள்ளது. 

முக்கியமாக, “மேகனாவுக்கும், கணவனான சங்கரண்ணாவின் தாயுக்கும் இடையேயான சண்டையே இதற்கு முக்கிய காரணம்” என்றும், கூறப்படுகிறது. 

இந்த சண்டையால், வெறுப்படைந்த மனைவி மேகனா, கணவன் சங்கரண்ணாவிடம் “நாம் மைசூரு அல்லது பெங்களூருவுக்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம்” என்று, கேட்டிருக்கிறார்.

அதற்கு, அவரோ, “நான் என் தாயை பிரிந்து எங்கும் வர மாட்டேன்” என்று, சங்கரண்ணா கூறிய நிலையில், இது தொடர்பாக சங்கரண்ணா -  மேகனா இடையே அடிக்கடி தகராறு வந்துகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினமும் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால், வாழ்க்கையே வெறுத்துப்போய் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் சங்கரண்ணா, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

அதன் படி, அவரது தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சங்கரப்பா சடலமாக காணப்பட்ட நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், “என் மகன் சங்கரண்ணா உயிரிழப்பிற்கு அவரது மனைவி மேகனா தான் காரணம் என்றும், சங்கரண்ணாவை மேகனா தான் தற்கொலைக்கு தூண்டியதாகவும்” சங்கரண்ணாவின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதனிடையே, உயிரிழந்த சங்கரண்ணாவின் இளம் வயது மனைவி மேகனா, தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment