கள்ளக் காதல்.. மனைவியை 70 துண்டுகளாக வெட்டி ஊர் முழுவதும் வீசிய ஐடி வேலை பார்க்கும் கணவன்!

கள்ளக் காதல்.. மனைவியை 70 துண்டுகளாக வெட்டி ஊர் முழுவதும் வீசிய ஐடி வேலை பார்க்கும் கணவன்! - Daily news

கள்ளக் காதல் விவகாரத்தில் தனது மனைவியை மிக கொடூரமான முறையில் கொலை செய்து கணவன், அவரது உடலை 70 துண்டுகளாக வெட்டி ஊர் முழுவதும் வீசிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் தான், இப்படி ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, டெல்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர், ஐடி என்ஜினீயராக பணியாற்றி வருகிார். 

இந்த ராஜேஸ், அனுபமா குலாட்டி என்ற பெண்ணை காதலித்து கடந்த 1999 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பின்னர், இந்தியாவில் சில வருடங்கள் இருந்துவிட்டு, இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

பின்னர், அடுத்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அனுபமா குலாட்டி ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 

இதனையடுத்து, அந்த கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இதனால், ராஜேஷ் அமெரிக்காவில் இருந்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு இந்தியா திரும்பினர். 

கணவன் - மனைவி இருவரும் நாடு திரும்பிய நிலையில், ராஜேஷ் கொல்கத்தாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார் என்றும் கூறப்பட்டது.

இதனால், கணவன் - மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு, தொடர்ந்து மோதிக்கொண்டே இருந்து உள்ளனர்.

அதே நேரத்தில், இவரது மனைவி அனுபமா, அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்ததாக, அவரது கணவன் சந்தேகம் அடைந்திருந்தார்.

இதனால், அவர்களுக்குள் நாளுக்கு நாள் தகராறு அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், “கணவன் ராஜேஷ், என்னை ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொண்டதாக” அவரது மனைவி அனுபமா, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும், “எனது கணவன் மாதம் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து, அந்த கணவனை போலீசார் அழைத்துப் பேசிய நிலையில், கடும் கோபம் அடைந்த அந்த கணவன், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். 

அந்த தருணத்தில், மீண்டும் அந்த கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. 

அப்போது, கணவன் ராஜேஷ், தனது மனைவியை அடித்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறார். இதில், அவரது மனைவி அனுபமா கீழே விழுந்த நிலையில், அப்படியே மயக்கி உள்ளார். 

இதனால், மனைவி உயிரிழந்து விட்டதாக நினைத்த அவர், அவரது நாடித்துடிப்பை பார்த்து உள்ளார். அப்போது, “மனைவி உயிரிழக்கவில்லை. மயக்கத்தில் தான் இருக்கிறார்” என்பதை தெரிந்துகொண்டு, அவரை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, உடனடியாக அந்த மனைவியின் மூக்கு மற்றும் வாயில் பஞ்சை திணித்து இருக்கிறார். இதனால், அவரது மனைவிக்கு மூச்சு திணறிய நிலையில், அடுத்த சிறிது நேரத்திலேயே அனுபமா பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இதனையடுத்து, தனது மனைவியின் உடலை எங்கே மறைத்து என்பது புரியாமல் திணறிய ராஜேஷ், “உயிரிழந்த மனைவியின் உடலை 70 துண்டுகளாக வெட்டி, அதனை பாலிதீன் பைகளில் போட்டு, கடந்த 2 மாதங்களாக அந்த ஊரின் பல்வேறு பகுதியிகளில் வீசி எரிந்து” உள்ளார்.

இந்த சூழலில் தான், அவரது இரு குழந்தைகளும், “அம்மா எங்கே?” என்று, கேள்வி எழுப்பி உள்ளனர். 

இதனால், தந்தையான ராஜேஷ், பல்வேறு பொய்களை கூறி சமாளித்து வந்திருந்தார். 

அத்துடன், அனுபமாவின் சகோதரர் சுஜன் குமார், இது தொடர்பாக டேராடூன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும், சந்தேகத்தின் பேரில் போலீசார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தனர். 

அப்போது, அதன் உள்ளே இருந்து கருப்பு ஒரு கருப்பு பையில் இருந்து துண்டிக்கப்பட்ட கை கால்களும், மனித உடல் உறுப்புகளும் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக ராஜேஷிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, வேறு வழியில்லாமல் அவர் தனது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இந்த வழக்கில், டேராடூன் நீதிமன்றத்தால் ராஜேசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment