ஆரம்பம் முதலே பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய தளபதி விஜயின் லியோ திரைப்படம் தற்போது உலக அளவில் மற்றொரு மிகப்பெரிய சாதனையை படைத்து அவதார் திரைப்படத்தோடு அந்த சாதனை பட்டியலில் இணைந்திருப்பது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக வந்திருக்கும் லியோ திரைப்படம் ரசிகர்கள் இன்னும் அதிகம் கொண்டாடும் வகையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கொரியா உள்ளிட்ட பகுதிகளின் ஐமேக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகிக்கும் பிரீதம் டேனியல் அவர்கள் ஐமேக்சில் லியோ திரைப்படம் படைத்திருக்கும் புதிய சாதனை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

அதன்படி உலக அளவில் அவதார் - தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உட்பட ஐமேக்சில் அதிக பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்த படங்களின் பட்டியலில் லியோ திரைப்படம் ஏழாவது இடத்தை பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 8ம் தேதி தனது X பக்கத்தில் இந்த ஆண்டு (2023) ஐமேக்சில் அதிக வசூல் செய்த இந்திய படம் எது என லியோ, பதான், ஜவான் ஆகிய மூன்று படங்களையும் குறிப்பிட்டு ரசிகர்களிடம் ஓட்டெடுப்பு நடத்திய பிரீதம் டேனியல், அதன் பதிலாக தற்போது “மூன்று படங்களும் அதிக வசூல் செய்து அந்த சாதனையை உடைத்து இருக்கின்றன என தெரிவித்து புலியோ திரைப்படம் இதில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது அதாவது அவதார் உட்பட பிற படங்கள் இருக்கும் பட்டியலில் லியோ ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவு இதோ…

இன்றைய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக தளபதி விஜய் இணைந்த திரைப்படம் தான் லியோ. தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா கதாநாயகியாக நடிக்க, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் என்ற லியோ திரைப்படத்தில் திரைக்கதை வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார், இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு மாஸ்டர்கள் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் கலை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோருடன் ராக்ஸ்டார் அனிருத் தொழில்நுட்ப ரீதியில் லியோ திரைப்படத்தை இதுவரை இந்திய சினிமா பார்த்திராத தரமான தரமான படைப்பாக ரசிகர்கள் கொண்டாட தங்களது சிறந்த உழைப்பை கொட்டி இருக்கின்றனர். ரிலீஸான முதல் நாளிலேயே 148.5 கோடி ரூபாய் வசூலித்து இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்திடாத மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த லியோ திரைப்படம் தொடர்ந்து 12 நாட்களில் 461 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் வரலாற்று சாதனை படைத்தது. தொடர்ந்து வெற்றி நடை போட்ட லியோ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 201 கோடி ரூபாய் வசூலித்து இன்னும் பெரிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.