ஸ்ரீ: பாலிவுட்டில் கம்பேக் கொடுத்த ஜோதிகாவின் பயோபிக் பட ரிலீஸில் மாற்றம்... புதிய தேதியுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜோதிகாவின் ஸ்ரீ பாலிவுட் பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு,actress jyotika in sri bollywood movie new release date announced | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்திருக்கும் ஸ்ரீ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. பயோபிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ஸ்ரீ திரைப்படம் முதலில் இந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி வழியாக உள்ள அறிவிக்கப்பட்டது. அதன் பின் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேதி மாற்றப்பட்டு வரும் மே மாதம் 10ம் தேதி ஸ்ரீ படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது திரைப்பயணத்தில் முதல் படமாக தோளி சஜா கே ரக்னா என்ற பாலிவுட் படத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஜோதிகா அதன் பிறகு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் இந்த ஸ்ரீ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

கண் பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் பயோபிக் திரைப்படமாக இந்த ஸ்ரீ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தியாவின் முதல் கண் பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். உலக அளவில் புகழ்பெற்ற Massachusetts Institute of Technology கல்லூரியின் முதல் கண் பார்வையற்ற மாணவரான ஸ்ரீகாந்த் பொல்லா, பொல்லா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்ரீ திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார். இயக்குனர் துஷார் ஹிரனந்தனி இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ராஜ்குமார் ராவ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ஸ்ரீ திரைப்படத்தில் ஆலயா மற்றும் சரத் கேல்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவர இருக்கும் பாலிவுட் படமான இந்த ஸ்ரீ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது இதன் புதிய ரிலீஸ் தேதி குறித்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஸ்ரீகாந்த் பொல்லாவின் சாத்தியமான பயணத்தை பார்த்து உத்வேகம் அடைய தயாராகுங்கள் ஸ்ரீ மே பத்தாம் தேதி வெளிவருகிறது" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நடிகை ஜோதிகாவின் அந்த பதிவு இதோ...

 

 

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)

அடுத்தடுத்து அசத்தலான படங்களில் நடித்து வரும் நடிகை ஜோதிகா மற்றொரு பாலிவுட் படமாக பிளாக் மேஜிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக முதல் முறை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உடன் இணைந்த நடிகை ஜோதிகா காதல் - தி கோர் எனும் மலையாள படத்தில் நடித்திருக்கிறார். தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருக்கும் இந்த காதல் தி கோர் திரைப்படம் வருகிற நவம்பர் 23ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் மாதவன் உடன் இணைந்து ஜோதிகா நடிக்கும் இந்த பிளாக் மேஜிக் திரைப்படத்தில் முன்னணி பாலிவுட் நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.