லால் சலாம் டீசர்: மொய்தீன் பாயாக மிரட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... விஷ்ணு விஷால் - விக்ராந்தின் அதிரடியான ஸ்போர்ட்ஸ் பட முன்னோட்டம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பட டீசர் வெளியீடு,superstar rajinikanth in lal salaam movie teaser out now | Galatta

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்திருக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய அதிரடியான பொலிடிகல் திரில்லர் படமான லால் சலாம் திரைப்படத்தின் டீசர் வெளியானது. தீபாவளியில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்தாக நேற்று நவம்பர் 12ஆம் தேதி வெளிவந்த லால் சலாம் படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மொய்தின் பாய் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலான ஆக்சன் காட்சிகளோடு என்ட்ரி கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அவர்களுடன் இணைந்து வருவது, "விளையாட்டுல மதத்தை கலந்து வச்சிருக்கீங்க குழந்தைங்க மனசுல கூட விஷத்தை விதைச்சு இருக்கீங்க" என்று பேசும் வசனம் என எல்லாமே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. அட்டகாசமான லால் சலாம் படத்தின் டீசர் இதோ…

தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முதல்முறையாக மொய்தின் பாய் எனும் சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் மேலும் செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா சனிக்குமார், விவேக் பிரசன்னா, தங்கதுரை உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் கபில் தேவ் அவர்கள் முக்கியமான ஒரு சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.  விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் லால் சலாம் திரைப்படத்தின் முழு டப்பிங்கையும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிறைவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக லால் சலாம் திரைப்படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த நாயகராக இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தில் 47 ஆண்டுகளை கடந்த போதும்  இன்றும் அதே வேகத்தோடு தொடர்ந்து ரசிகர்கள் தனது படங்களால் மகிழ்வித்து வருகிறார் அந்த வகையில் முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் 50 நாட்களைக் கடந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இண்டஸ்ட்ரி ஹிட்டாக பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. அடுத்ததாக சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் இயக்கத்தில் முதல்முறையாக தலைவர் 170 படத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த நடிக்க இருக்கிறார்.