லியோ சர்ப்ரைஸ்: தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் அதிரடி ஆக்சன் படத்திலிருந்து வெளியான "ரட்டடா டிராக்" இதோ!

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து ரட்டடா டிராக் வெளியீடு,thalapathy vijay in leo movie ratata track out now | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்திலிருந்து ரட்டடா டிராக் வெளியானது. அடுத்தடுத்து உச்ச நட்சத்திர நாயகர்களின் ஒவ்வொரு மிகப்பெரிய திரைப்படங்களிலும் தனது இசையால் மிகப்பெரிய பலம் சேர்த்து வரும் ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்தில் அப்படி ஒரு அதிரடி சம்பவமாக செய்த "ரட்டடா டிராக்" படத்தின் ஆக்சன் காட்சிகளில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அதிரடியான இந்த ரட்டடா டிராக் தற்போது வெளிவந்து ட்ரெண்டாகி வருகிறது. லியோ திரைப்படத்தின் அந்த ரட்டடா டிராக் இதோ...

 

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் இந்திய சினிமா வியந்து பார்க்கும் வகையில் முதல் நாளிலேயே அதிகபட்ச வசூல் செய்த படமாக 148.75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்த லியோ திரைப்படம் இதுவரை முதல் வார இறுதியில் 461 கோடிக்கு மேல் வசூல் செய்தது.தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கும் லியோ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 201 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மற்றொரு வரலாற்று சாதனையையும் படைத்தது. 

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி விஜய் திரிஷா ஜோடி இணைந்து நடித்த லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியுடன் கழுதைப்புலி உடனான மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சி மிகவும் தத்ரூபமாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்ததாக தனது திரை பயணத்தில் 68 வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார் தளபதி விஜய். முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. பக்கா அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்திற்கான மிரட்டலான சண்டை காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. விஜயின் தளபதி 68 திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.