ஜப்பான்: கார்த்தியின் தீபாவளி விருந்தாக வரும் ஆக்சன் என்டர்டெய்னர் படக்குழு வெளியிட்ட "JOURNEY OF GOLDEN STAR" வீடியோ இதோ!

கார்த்தியின் ஜப்பான் படக்குழு வெளியிட்ட JOURNEY OF GOLDEN STAR வீடியோ,karthi in japan movie crew released journey of golden star video | Galatta

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்திலிருந்து JOURNEY OF GOLDEN STAR என்ற பெயரில் ஜப்பான் படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்திலேயே இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபடும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் இந்த ஜப்பான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் முருகனின் கதாபாத்திரம் போன்ற ஒரு திருடனாக கார்த்தி நடித்திருப்பதாக தெரிகிறது இந்த நிலையில் தற்போது ஜப்பான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவாக படைப்பு வெளியிட்டு இருக்கும் இந்த JOURNEY OF GOLDEN STAR வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த வீடியோ இதோ…

 

நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக இந்த தீபாவளிக்கு வரும் படம் தான் ஜப்பான். சுருட்டை முடி வித்தியாசமான உடல் மொழி தங்கப்பல் உடல் முழுக்க தங்க நகைகள் மினுமினுக்கும் வகையிலான உடைகள் என ஒரு வித்தியாசமான திருடன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்த ஜப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில், வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

ஜப்பான் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வரிசையாக அட்டகாசமான படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். தலைவர் 171 படத்திற்கு பிறகு அது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் தனது 26 ஆவது திரைப்படமாக உருவாகும் #கார்த்தி26 திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது 27 வது படமாக 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் எழுதி இயக்கும் கார்த்தி 27 திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் #கார்த்தி27 படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். 

ஜப்பான் நாளை நவம்பர் 10ஆம் தேதி உலகம் எங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் & SJ.சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLEX மற்றும் நடிகர் விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இதில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா DOUBLEX ஆகிய இரண்டு படங்களுக்கும் 10ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினசரி ஒரு சிறப்பு காட்சியுடன் ஐந்து காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.