தி வில்லேஜ்: இந்த நவம்பரில் வெளியாகும் ஆர்யாவின் முதல் வெப் சீரிஸ்... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!

ஆர்யாவின் முதல் வெப் சீரீஸான தி வில்லேஜ் டீசர் வெளியீடு,arya in first teaser the village teaser out now | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா நடிப்பில் முதல் வெப்சீரீஸாக வெளிவர தயாராகி இருக்கிறது தி வில்லேஜ். அமானுஷ்யமான ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்ட இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ் வருகிற நவம்பர் 24ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளி வருகிறது. இதனை அறிவிக்கும் வகையில் தற்போது அமேசான் பிரைம் வீடியோ தி வில்லேஜ் வெப்சீரிஸின் முதல் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது. மிரள வைக்கும் காட்சிகளோடு வெளிவந்த திரில்லிங்கான இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

அஸ்வின் ஸ்ரீவட்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷமிக் தஸ்குப்தாவின் தி வில்லேஜ் என்ற கிராஃபிக் ஹாரர் நாவலை தழுவி அதே பெயரில் இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த அவள் எனும் ஹாரர் படத்தையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் எனும் திரள திரைப்படத்தையும் இயக்கிய மிலின்ட் ராவ் தி வில்லேஜ் வெப் சீரிசை இயக்கியுள்ளார். ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனரும் தளபதி விஜயின் லியோ படத்தின் வசனகர்த்தாவுமான தீரஜ் வைத்தி , தீப்தி கோவிந்தராஜன் இருவரும் இயக்குனர் மிலின்ட் ராவ் உடன் இணைந்து இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ்க்கு திரைக்கதை வசனங்களை எழுதியுள்ளனர். நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸில் நடிகை திவ்யா பிள்ளை கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், சன்னி, முத்துக்குமார், கலை ராணி, ஜான் கொக்கன், பூஜா, ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் தி வில்லேஜ் வெப் சீரிஸில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த 2023 ஆம் ஆண்டில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் ஆர்யா நடிப்பில் தயாராகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் அடுத்த படமாக தயாராகி வரும் Mr.X திரைப்படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். பக்கா ஆக்சன் திரைப்படமாக தயாராகும் இந்த Mr.X திரைப்படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித் - ஆர்யா ஜோடி விரைவில் சார்பட்டா 2 படத்தில் இணைய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. இது போக தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் அதிரடி படமாக வெளிவர இருக்கும் சைந்தவ் எனும் திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.