"கங்குவா": நடிகர் சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு ஸ்பெஷலான சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு... ட்ரெண்டாகும் GLIMPSE இதோ!

சூர்யாவின் கங்குவா பட தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு,suriya in kanguva movie diwali special poster out now | Galatta

நடிகர் சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கும் வகையில் கங்குவா திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தனது திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக தற்போது சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா திரைப்படம் நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட படைப்பாக மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார். மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். 

ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என தெரிகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தீபாவளிக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூர்யாவின் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளனர். அதிரடியான அந்த போஸ்டர் இதோ... 

 

Lighting up your Diwali with the torches of ancient glory🔥🎇

Team #Kanguva🦅 wishes you all a #HappyDiwali🪔@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @saregamasouth @vetrivisuals @supremesundar pic.twitter.com/dUlAKZKufA

— Studio Green (@StudioGreen2) November 12, 2023

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா முன்னதாக தனது நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்று தேசிய விருதுகளை வென்று குவித்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்தில் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.முன்னதாக வாடிவாசல் திரைப்படத்திற்கான பிரத்யேக VFX பணிகளுக்காக இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்று வந்தார் மேலும் அச்சு அசலாக ஒரு காளையை மெக்கட்ரானிக்ஸ் முறையில் வாடிவாசல் திரைப்படத்திற்காக தயார் செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் , விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தனது 43வது திரைப்படமாக உருவாகும் சூர்யா 43 படத்தில் மீண்டும் இயக்குனர் கொங்காரா இயக்கத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் 100வது படமாக உருவாகும் இந்த சூர்யா 43 திரைப்படத்தில் துல்கர் சல்மான் நஸ்ரியா நசீம் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.