தளபதி 68: "உங்க கிஃப்ட் ரெடி ஆயிட்டுருக்கு!"- தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ஹின்ட் கொடுத்த வெங்கட் பிரபு! விவரம் உள்ளே

தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ஹின்ட் கொடுத்த வெங்கட் பிரபு,venkat prabhu special hint on vijay in thalapathy 68 movie | Galatta

தளபதி விஜய் அவர்களின் அதிரடி ஆக்சன் படமாக தயாராகி வரும் தளபதி 68 திரைப்படத்தில் ரசிகர்களுக்கு செம்ம பரிசு இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு ஹின்ட் கொடுத்து இருக்கிறார். தற்போது தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது பதிவிட்டு இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 திரைப்படம் குறித்தும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். இது குறித்த அந்த பதிவில், “என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி… உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களது அன்பால் நெகிழ்ந்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என்னிடம் இருந்து ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் ரெடி ஆகி கொண்டு இருக்கிறது. இந்த பிறந்தநாள் மறக்க முடியாத ஒரு பிறந்தநாள்… அது ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி… கடவுள் மிகவும் அன்பானவர் #தளபதி68” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் அந்தப் பதிவு இதோ…

 

 

View this post on Instagram

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருப்பதை தொடர்ந்து அதன் வெற்றி விழாவை நிறைவு செய்துவிட்டு தற்போது தனது 68வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தற்போது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த தளபதி 68 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 6ஆம் தேதி இரவில் தாய்லாந்தில் தளபதி 68 திரைப்படத்திற்கான மிக முக்கியமான ஒரு ஆக்சன் பிளாக் படமாக்கப்பட்டதாகவும் அதனால் நவம்பர் 7ஆம் தேதி இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் படக்குழு அறிவித்தனர்.

தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதிய கீதை படத்திற்கு தளபதி 68 திரைப்படத்தின் மூலம் கிட்டத்தட்ட பிறகு 20 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.