கருப்பர் நகரம்: அறம் இயக்குனர் கோபி நயனார் உடன் கைகோர்த்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி பட விறுவிறுப்பான டீசர் இதோ! 

கோபி நயனார் ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷின் கருப்பர் நகரம் பட டீசர் வெளியீடு,aramm gopi nainar jai aishwarya rajiesh in karuppar nagaram teaser | Galatta

அறம் படத்தின் இயக்குனர் கோபி நயனார் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் கருப்பர் நகரம் திரைப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. வடசென்னை மையப்படுத்திய கதைக்களமாக தயாராகி இருக்கும் இந்த கருப்பர் நகரம் திரைப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை எடுத்துள்ளது. மிக முக்கியமான அரசியலை பேசக்கூடிய ஆக்சன் திரில்லர் படமாக இந்த கருப்பர் நகரம் படம் இருக்கும் என்பது இந்த டீசரில் தெளிவாக தெரிகிறது. அந்த கருப்பர் நகரம் டீசர் இதோ…

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற அறம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கோபி நயனார் அவர்களின் இயக்கத்தில் அடுத்த படைப்பாக தயாராகி இருக்கிறது இந்த கருப்பர் நகரம் திரைப்படம். இயக்குனர் கோபி நயனார் உடன் நடிகர் ஜெய் இணையும் இந்த கருப்பர் நகரம் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது ஆனால் அதன் பிறகு எந்த விதமான அறிவிப்பும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் நவம்பர் 7ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று (நவம்பர் 8) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

வடசென்னையை மையப்படுத்தி கால்பந்து விளையாட்டை அடித்தளமாக கொண்டு நகரும் கதைக்களத்தில் உருவாகும் "கருப்பர் நகரம்" திரைப்படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் (சர்வம், தெனாவட்டு உள்ளிட்ட படங்களில் நடித்த) பிரபல தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ஸ்ரீஜித் ரவி, சுப்பிரமணியம் பஞ்சு அருணாச்சலம், சூப்பர் சுப்பராயன், தீபா சங்கர், பவன், டேனியல் போப் பழனி பட்டாளம், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் NK.ஏகாம்பரம் அவர்களின் ஒளிப்பதிவில் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்யும் இந்த கருப்பர் நகரம் திரைப்படத்திற்கு கே.எஸ்.பிரசாத் இசையமைக்கிறார். வருகிற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கருப்பர் நகரம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்

இதனிடையே ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரது திரை பயணத்திலும் தொடர்ந்து அசத்தலான படைப்புகள் வெளிவர தயாராகி வருகின்றன அந்த வகையில் முதலாம் ஜெய் நடித்துள்ள லேபிள் வெப்சைட் நாளை நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. அடுத்ததாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது திரை பயணத்தில் 75வது படமாக நடித்திருக்கும் அன்னபூரணி திரைப்படத்தில் ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தற்சமயம் அன்னபூரணி திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோகன்தாஸ் மற்றும் தீயவர் குலைகள் நடுங்க ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹெர் மற்றும் அஜயன்டே ரண்டாம் மோக்ஷனம் என்ற இரண்டு மலையாள படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.