பிளாக்பஸ்டர் "லியோ": தளபதி விஜயின் மிரட்டலான ACTION PACKED ட்ரீட் 25 நாட்களைக் கடந்து படைத்த அதிரடி பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளின் பட்டியல் இதோ!

தளபதி விஜயின் லியோ படம் 25 நாட்களை கடந்தது,thalapathy vijay in leo successfully crossed 25 days in theatres | Galatta

உச்சகட்ட ஆக்சன் அதிரடியான காட்சிகள் வேற லெவல் மாஸ் என்டர்டைன்மென்ட் என வெளிவந்த தளபதி விஜயின் லியோ திரைப்படம் தற்போது 25 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த லியோ திரைப்படம் தற்போது தீபாவளி வெளியீடாக சில படங்கள் வெளியான பிறகும் கூட பல திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு மத்தியில் ஓடும் லியோ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வம் குறையாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் 25 நாட்களை கடந்திருப்பதை அறிவிக்கும் வகையில் பட குழு வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இதுவரை லியோ திரைப்படம் படைத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளின் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம், தமிழ்நாட்டில் முதல் 100 கோடி ரூபாய் பகிர்வு செய்த படம், UKவில் அதிக வசூல் செய்த கோலிவுட் திரைப்படம், பிரான்சில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட கோலிவுட் திரைப்படம், வளைகுடா நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம், வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம், இலங்கையில் அதிக வசூல் செய்த தமிழ் படம், கனடாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம், கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம், ஜெர்மனியில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை லியோ திரைப்படம் படைத்திருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ...

 

Ratata 🔥 - It's a Freakin' Badass 25th Day of #Leo ❤️

Industry Blockbuster Pathachu maa 💥

Wishing you all a Happy & Bloody Sweet #Diwali ✨🪔#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishblisspic.twitter.com/5SPzNIytHD

— Seven Screen Studio (@7screenstudio) November 12, 2023

மாஸ்டர் படத்திற்கு பின் இரண்டாவது முறை இணைந்திருக்கும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து எவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்ததோ அதைவிட பெரிய எதிர்பார்ப்பு படம் ரிலீஸ் ஆகும் போதும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகபட்ச வசூல் செய்த படமாக லியோ திரைப்படம் 148.75 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை செய்தது. தொடர்ந்து கொண்டாடப்பட்ட லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 461 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவிலேயே முதல் வாரத்தில் அதிகபட்ச வசூல் செய்த படமாக மற்றொரு வரலாற்று சாதனையை படைத்தது. 

இதுவரை மொத்தமாக 600 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மேலும் வெளிநாடுகளிலும் 201 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற மிகப்பெரிய வரலாற்று பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இந்த இமாலய வெற்றியை கொண்டாடும் வகையில் சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை முடித்த கையோடு தனது அடுத்த படமாக தளபதி 68 திரைப்படத்தில் தற்போது முழு கவனம் செலுத்தி வரும் தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.