கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளிவந்த ராகவா லாரன்ஸ் & SJ சூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்திலிருந்து “ஒய்யாரம்” எனும் புதிய பாடல் வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இந்த “ஒய்யாரம்” பாடலை மீனாட்சி இளையராஜா, மீனாட்சி சந்தோஷ், ஆதித்யா, ரவீந்திரன் ஆகியோர் உடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் நடைபெறும் கொண்டாட்டமாக வந்திருக்கும் இந்த ஒய்யாரம் பாடலுக்கு ஷெரிஃப் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் அவர்களின் கலக்கலான நடனத்தில் வெளிவந்திருக்கும் ஒய்யாரம் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பக்கா செலிப்ரேஷன் மோடில் வந்திருக்கும் “ஒய்யாரம்” பாடல் இதோ…

கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்தின் கொண்டாட்டத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த கொண்டாட்டமாக நேரடியாக தியேட்டருக்கு வந்திருக்கும் படம் தான் ஜிகர்தண்டா DOUBLE X. தனுஷின் ஜெகமே தந்திரம் மற்றும் சீயான் விக்ரமின் மகான் ஆகிய இரண்டு படங்களும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து நேரடியாக நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் வெளியாகிய நிலையில், இந்த நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தியேட்டரில் வெளிவந்திருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா DOUBLE X தரமான கார்த்திக் சுப்பராஜ் படம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. தீபாவளி கொண்டாட்டமாக வெளிவந்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கியது. அதன்படி 9AM மணி முதல் 1.30AM வரை ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வீதம் நவம்பர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் செம ஸ்டைலாக கதை சொல்லும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் திரை பயணத்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றுதான் ஜிகர்தண்டா. ஒட்டுமொத்த இந்திய திரை உலகினரும் பாராட்டி கொண்டாடிய ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை தயாரிப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி இருக்கிற இந்த ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.